PF உறுப்பினர்களே உஷார்! பிப்ரவரி 15 கடைசி தேதி, இதை செய்யவில்லை என்றால் பிரச்சனை

EPFO ELI UAN Activation: இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்கு மற்றும் யுனிவர்சல் கணக்கு எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15 என EPFO ​​நிர்ணயித்துள்ளது. முன்னர் இந்த காலக்கெடு ஜனவரி 15 ஆக இருந்தது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2025, 10:48 AM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கான முக்கிய அப்டேட்.
  • யுனிவர்சல் கணக்கு எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15.
  • ஊழியர்கள் UAN மற்றும் ஆதாரை இரண்டு வழிகளில் இணைக்கலாம்.
PF உறுப்பினர்களே உஷார்! பிப்ரவரி 15 கடைசி தேதி, இதை செய்யவில்லை என்றால் பிரச்சனை title=

EPFO Upate: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. இன்னும் 5 நாட்களுக்குள் அவர்கள் செய்து முடிக்க வேண்டிய ஒரு முக்கியமான பணி உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான முக்கிய அப்டேட்

இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்கு மற்றும் யுனிவர்சல் கணக்கு எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15 என EPFO ​​நிர்ணயித்துள்ளது. முன்னர் இந்த காலக்கெடு ஜனவரி 15 ஆக இருந்தது. இந்த காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

இப்போது இபிஎஃப் சந்தாதார்ரகள் (EPF Subscribers) EPFO தொடர்பான இந்தப் பணியை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் எப்படியாவது முடிக்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் பிரச்சினைகள் பின்னர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில பலன்களை உறுப்பினர்கள் பெற முடியாத சூழல் ஏற்படலாம். உதாரணமாக, 2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் (Employment Linked Incentive Scheme) பலன்களை எந்த வித தடையும் இல்லாமல் பெற, ஊழியர்கள் தங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணை ஆக்டிவேட் செய்து, தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதாரை முழுமையாக இணைக்க வேண்டும். 

EPFO உறுப்பினர்களுக்கு UAN எண் மிகவும் முக்கியமானது. இது செயலில் வைக்கப்படாவிட்டால், அதாவது இதை ஆக்டிவேட் செய்யாவிட்டால், இபிஎஃப் கணக்கு (EPF Account) தொடர்பான பணிகள் சிக்கிக்கொள்ளக்கூடும். இது ஒரு 12 இலக்க எண் ஆகும். இந்த எண் எப்போதும் மாறாமல் அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தை மாற்றினால் UAN மாறுமா?

ஊழியர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினாலும், இந்த யுஏஎன் எண் மாறாமல் அப்படியேதான் இருக்கும். ஊழியர்கள் வேறு இடத்திற்கு தங்கள் வேலையை மாற்றும்போது PF கணக்கை மாற்றலாம். இதை ஆன்லைனிலேயே செய்யலாம். இது மட்டுமல்லாமல், ஊழியர்கள் தங்கள் EPFO ​​தொடர்பான பல பணிகளை ஆன்லைனிலேயே செய்து முடிக்கலாம். 

PF கணக்கை நிர்வகித்தல், ஸ்டேட்மெண்ட், அதாவது பிஎஃப் அறிக்கைகளை செக் செய்தல், அறிக்கையைப் பதிவிறக்குதல், பண பரிமாற்றம், பிஎஃப் முன்பணம் பெற ஆன்லைனில் விண்ணப்பித்தல் போன்ற பணிகளை இப்போது ஆன்லைனிலேயே செய்ய முடியும். இதனுடன், ஊழியர்கள் தங்கள் ஆதார் மற்றும் பிற தகவல்களையும் ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.

UAN-ஐ ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான வழிமுறை:

ஊழியர்கள் UAN மற்றும் ஆதாரை இரண்டு வழிகளில் இணைக்கலாம்.

EPFO Website: EPFO-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் இணைப்பதற்கான வழிமுறை:

- முதலில் EPFO-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://unifiedportal-mem.epfindia.gov.in-க்குச் செல்லவும்.

- இதன் பின்னர், e-KYC போர்ட்டலைக் கிளிக் செய்யவும்.

- இப்போது UAN மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.

- இதற்குப் பிறகு Get OTP என்பதைக் கிளிக் செய்யவும்.

- பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். அதை உள்ளிடவும்.

- அதற்கு பிறகு, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு சமர்ப்பித்த பிறகு, அதாவது சப்மிட் செய்த பிறகு ஆதார் இணைக்கப்படும்.

UMANG App: உமங் செயலி மூலம் இணைப்பதற்கான வழிமுறை:

- முதலில் உங்கள் மொபைல் போனில் உமங் செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

- அடுத்ததாக, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டு லாக் இன் செய்யவும்.

- இதற்குப் பிறகு EPFO Services என்பதைக் கிளிக் செய்யவும்.

- இப்போது ஆதார் சீடிங் (Aadhaar Seeding) என்பதைக் க்ளிக் செய்யவும்.

- UAN எண்ணை உள்ளிட்ட பிறகு, OTP ஐ உள்ளிடவும்.

- பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.

UAN எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், EPFO ​​உதவி எண்ணை அழைத்து உதவி பெறலாம்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஊதிய உயர்வு எவ்வளவு? 186%? 20-30%? அட்டகாசமான அப்டேட் இதோ

மேலும் படிக்க | CPENGRAMS | ஓய்வூதியம் பெறும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News