மாமியாராக நடித்தவரையே திருமணம் செய்த பிரபல நடிகர்! யாரு ராசா நீ..?

Serial Actor Married Actress Who Played As His Mother In Law : ஒரு பிரபல நடிகர், தனக்கு மாமியாராக நடித்தவரையே திருமணம் செய்து, சமீபத்தில் திருமண நாளையும் கொண்டாடினார். அவர் யார் தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Feb 10, 2025, 10:06 AM IST
  • மாமியாராக நடித்தவரை திருமணம் செய்து கொண்ட நடிகர்..
  • 20 வருடங்கள் ஆகிறது..
  • இந்த ஜோடி பற்றி தெரியுமா?
மாமியாராக நடித்தவரையே திருமணம் செய்த பிரபல நடிகர்! யாரு ராசா நீ..? title=

Serial Actor Married Actress Who Played As His Mother In Law : காதலுக்கு கண் இல்லை என்பதை அனைவருமே கேள்வி பட்டிருப்போம். பல சமயங்களில் அதிக வயதுடைய ஆண்கள், குறைந்த வயதுள்ள பெண்களை திருமணம் செய்வதையும், அதிக வயதுள்ள பெண்கள், குறைந்த வயதுள்ள ஆண்களை திருமணம் செய்வதையும் பார்த்துள்ளோம். இதற்கு சான்றாக பிரியங்கா சோப்ரா, சச்சின் உள்ளிட்ட பல பிரபலங்கள் விளங்குகின்றனர். அந்த வகையில், ஒரு பிரபல நடிகரும், தனக்கு மாமியாராக நடித்தவரையே திருமணம் செய்துள்ள சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மாமியாராக நடித்தவரையே காதலித்த நபர்..

தெலுங்கில் பிரபல சீரியலாக விளங்குகிறது, சக்ரவாரம். இந்த தொடர், 2003ஆம் ஆண்டில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் இந்திரநீல் என்பவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, அவருக்கு மாமியாராக நடித்திருந்தார், மேக்னா.

இந்த தொடர் ஒளிபரப்பாகி பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், இத்தனை ஆண்டுகளில் மக்கள் அந்த சீரியலை நினைவில் வைத்துக்கொண்டார்களோ இல்லையோ, இந்திரநீல் மற்றும் மேக்னா ஆகியோர் நன்கு நினைவில் வைத்துக்கொண்டனர். அதற்கு காரணம் இவர்களின் நடிப்பு மட்டுமல்ல, யாரும் எதிர்பார்க்காத இவர்களின் திருமண அறிவிப்புதான்.

2003ஆம் ஆண்டில் ஒளிபரப்பான போது இந்த தொடர் அதிகளவில் டிஆர்பி பெற்று டாப்பில் இருந்தது. இதையடுத்து கொரோனா காலத்தில் இதனை மீண்டும் ஒளிபரப்பு செய்தனர். இதில் வித்தியாசம் என்னெவன்றால், சீரியலில் மாமியார்-மருகனாக நடித்தவர்கள், நிஜத்தில் கணவன்-மனைவியாகி விட்டனர். இது அந்த காலத்தில் சர்ச்சையை கிளப்பினாலும், பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

20 வருடங்களை கடந்து..

இப்போதுள்ள பலர், காதல் திருமணமே செய்து கொண்டாலும் அந்த திருமண பந்தத்தில் பலர் நெடுங்காலம் வாழ்வதில்லை. சிறிய சண்டை வந்தாலும் அந்த உறவினை முடித்துக்கொள்கின்றனர். ஆனால், பல சர்ச்சைகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி சமீபத்தில் தங்களது திருமண நாளை கொண்டாடினர். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

குழந்தைகள் பற்றி..

20 வருடங்களாக இந்த தம்பதிகள், குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லை. இவர்களிடம் ஒருமுறை இது குறித்து கேள்வி கேட்க்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இவர்கள், தங்களுக்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும் என்றும், குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லை என்றும் கூறினர். ஆனால், இப்போதே தங்களுக்கு 40 வயதாகி விட்டதாக கூறும் இவர்கள், இப்போது குழந்தைகளை பற்றி யோசித்தால் கூட, தங்களுக்கு 60 வயதாகும் போது, குழந்தைகளுக்கு 20 வயதாகும், அப்போது தங்களுக்கு ஏதாவதொன்று ஆகிவிட்டால் என்ன செய்வது என்றும், அவர்களை அதன் பிறகு யார் பார்த்துக்கொள்வது என்றும் கூறியிருக்கின்றனர்.

இப்படி குழந்தைகள் குறித்து தாங்கள் பேசும் போது, தங்களுக்கு நெகடிவாக கமெண்ட் வருவதாகவும், இப்படி செய்வது சரியில்லை என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்திரநீல், தொடர்ந்து சீரியல்களிலும், சில படங்களில் துணை கதாப்பாத்திரமாகவும் நடித்து வருகிறார். அவரது மனைவி மேக்னா சீரியல்களில் நடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது.

மேலும் படிக்க | தனக்கு தாயாக நடித்தவரையே காதலித்த கமல்ஹாசன்! எந்த நடிகை தெரியுமா?\

மேலும் படிக்க | 19 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ரஜினி! யார் அவர் தெரியுமா?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News