PPF vs SIP, Investment Tips: இப்போதெல்லாம் முதலீடு என்றாலே பலரும் பங்குச்சந்தை நாடும் வழக்கம் அதிகரித்துவிட்டது. பங்குச்சந்தையில் மியூச்சுவல் ஃபண்டில் SIP மூலம் மாதாமாதமோ அல்லது தங்களுக்கு ஏற்ற வகையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்கின்றனர். நீண்ட கால முதலீட்டில் இந்த SIP என்பது பெரியளவில் கைக்கொடுக்கிறது. நீண்ட கால நோக்கில் வருமானமும் பெரிதாக இருக்கிறது.
அதேபோல், நீண்ட கால முதலீட்டில் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) திட்டமும் முதலீட்டாளர்களுக்கு பெரியளவில் கைக்கொடுக்கிறது. இந்த இரண்டும் முதலீட்டாளர்களின் வெவ்வேறு தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
மேலும், இரண்டும் வெவ்வேறு அளவிலான ரிஸ்கையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ஆண்டுக்கு 9,500 ரூபாயை முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு SIP மூலமான மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதில் அதிக வருமானம் வருமா அல்லது PPF திட்டத்தில் முதலீடு செய்வதில் அதிக வருமானம் வருமா என்பதை இங்கு காணலாம். இதன் கணக்கீட்டையும் இங்கு காணலாம்.
Investment Tips: பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
இது பங்குச்சந்தை முதலீட்டை விட ரிஸ்க் குறைவாகும். இதில் அரசின் நிலையான வட்டி விகிதம் கிடைக்கிறது. உத்தரவாதமான வருமானம், வரி சார்ந்த பலன்கள் ஆகியவை கிடைக்கும். இதில் தற்போது ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் கொடுக்கப்படும். இதற்கு கூட்டு வட்டியும் வரும். இந்த திட்டத்தின் மொத்த காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதனை நீங்கள் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீடு, வட்டி மற்றும் முதிர்ச்சித் தொகை ஆகியவைக்கு 80-C பிரிவில் வரி விலக்கு கிடைக்கும். இதில் நீங்கள் ஆண்டுக்கு ரூ.9,500 முதலீடு செய்தால், மொத்தம் 15 ஆண்டுகளில் ரூ.1,42,500 முதலீடு செய்வீர்கள். தற்போதைய 7.1% வட்டி விகிதத்தால் 1,15,153 ரூபாய் வட்டியாக வரும். மொத்த முதிர்ச்சி தொகையாக 2,57,653 ரூபாய் கிடைக்கும்.
மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.10,000 முதலீட்டில் கோடீஸ்வரராகலாம்... எளிய கணக்கீடு இதோ
Investment Tips: மியூச்சுவல் பண்ட் (SIP)
இதில் நீங்கள் குறைந்த தொகையை தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடியும். நீண்ட காலத்தில் கூட்டு வட்டி பலன்கள் அதிகம் கிடைக்கும். உங்களின் கணக்கில் இருந்தே மாதந்தோறும் அந்த குறிப்பிட்ட தொகை முதலீட்டுக்காக எடுக்கப்பட்டுவிடும். சந்தை நிலவரப்படி நீங்கள் பங்குகளை வாங்கலாம். அதற்கேற்ப வருமானம் வரும். உங்களின் வருமானமும் மீண்டும் முதலீடு செய்யப்படும்.
இதில் நீங்கள் வருடத்திற்கு 9,500 ரூபாயை, அதாவது மாதம் ரூ.790 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.15 ஆண்டுகளில் ரூ.1,42,200 முதலீடு செய்திருப்பீர்கள். தற்போதைய மதிப்பீடுகளில் இந்த முதலீட்டில் இருந்து ரூ.2,56,415 வருமானம் வரும் என கணக்கிடப்படுகிறது. மொத்தமாக ரூ.3,98,615 பெறுவீர்கள்.
Investment Tips: PPF vs SIP - எது இதில் பெஸ்ட்?
PPFஇல் உத்தரவாதமான வருமானம், வரி சலுகையுடன் வரும். பாதுகாப்பான முதலீட்டாளர்களுக்கு இது உதவும். SIPஇல் உத்தரவாதமான வருமானம் இல்லை என்றாலும் அதிக வருமானம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதில் ரிஸ்க் இருக்கிறது. எனவே, உங்கள் ரிஸ்கை பொறுத்து நீங்கள் முதலீடு செய்யலாம். அதிக வருமானம் வேண்டும் என்றால் SIP மற்றும் பாதுகாப்பான முதலீட்டுக்கு PPF ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.9000 முதலீடு போதும்... ரூ.10 கோடி கையில் இருக்கும்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ