டான்ஸ் ஆடும் போது உயிரிழந்த 23 வயது பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ..

Viral Video 23 Year Old Woman Dies While Dancing : 23 வயது பெண் ஒருவர் நடனம் ஆடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Yuvashree | Last Updated : Feb 11, 2025, 03:52 PM IST
  • திருமணத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி..
  • நடனமாடிய போது உயிரிழந்த பெண்!
  • பயமுறுத்தும் வைரல் வீடியோ..
டான்ஸ் ஆடும் போது உயிரிழந்த 23 வயது பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ.. title=

Viral Video 23 Year Old Woman Dies While Dancing : கடந்த சில நாட்களாகவே செய்திகளில் காண்பிக்கும் சில விஷயங்கள் மனதை நொறுக்கும் வகையில் இருக்கின்றன. குறிப்பாக ஒருவர் எதிர்பாராத விதமாக இறக்கம் செய்திகள் அதிகமாகி இருக்கின்றன. எட்டாவது படிக்கும் சிறுவனிலிருந்து, 80 வயது தாத்தா வரை பலர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழப்பது குறித்த செய்திகள் அதிகமாகி இருக்கின்றன. இதுபோன்ற இறப்புகள் ஏன் ஏற்படுகின்றன என்பதே தெரியவில்லை. சில சமயங்களில் அந்த மயக்கத்திற்கு காரணமாக மாரடைப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உயிரிழந்த 23 வயது பெண்..

மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு ஒரு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதில் ஒரு 23 வயது இளம் பெண், ஒரு ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தார். இவரை சுற்றி கேமராக்கள் பல இருந்தன. இருவரும் அதை பார்த்தவாறு ஆடிக் கொண்டிருந்தார்.

மேடையில் சிரிப்புடன் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டிருந்த அவர், திடீரென்று தடுமாறத் தொடங்கினார். பின்பு அப்படியே தரையை நோக்கி சரிந்து விட்டார். அதன் பிறகு அவர் உடலில் அசைவே இல்லை.

வைரலாகும் வீடியோ..

இந்த வீடியோவில் அப்பெண் நடனம் ஆடுவதும் அவரை சுற்றி கேமராக்கள் இருப்பதும் பதிவாகி இருக்கிறது. பாடலுக்கு நடனமாடும் இவர், முதலில் சந்தோஷமாகத்தான் ஆரம்பிக்கிறார். மயக்கம் அடைவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு கூட ஆடிக் கொண்டுதான் இருக்கிறார். திடீரென்று அப்படியே குப்புற விழுந்துவிட்டார்.

யார் அந்த பெண்? 

இந்தப் பெண் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பரினிதா ஜெயின் என்பவர் ஆவார். இவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் இந்த நடனத்தை பிராக்டிஸ் செய்திருக்கிறார்.

இளம்பெண் உயிரிழந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்ததை தொடர்ந்து, இது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒரு சிலர் இயற்கையை எப்படி என்றே கணிக்க முடியவில்லை என்று கூற, இன்னும் சிலர் அனைவரும் உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்

அனைவரும் கூடும் இது போன்ற திருமண நிகழ்வில், யாரும் எதிர்பாக்காத வகையில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்வது இது முதன்முறையல்ல. தன் நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டு, பரிசு கொடுக்கும்போது ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமும் அனைவருக்கும் நினைவிருக்கும். அதேபோல சமீபத்தில் ஒரு 15 வயது சிறுவன் கிரிக்கெட் விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அனைவரையும் உலுக்கியது. இதற்கு அடுத்து இதே மத்திய பிரதேசத்தில் 73 வயது நபர் மேடையில் யோகா செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது இன்னும் பெரிய பயத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மாரடைப்பால் உயரிழந்த 8 வயது சிறுமி!! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..

மேலும் படிக்க | வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்து கொண்ட ஆசிரியை! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News