சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் இவைதான்: சிவன் அருளால் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

Favourite Zodiac Signs of Lord Shiva: அனைத்து ராசிகள் மீதும் சிவ பெருமான் சமமாக அருளை பொழிந்தாலும், ஜோதிட கணக்கீடுகளில் படி, சில ராசிக்காரர்கள் சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்களாக இருக்கிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2025, 03:14 PM IST
  • இன்னும் சில நாட்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ளது.
  • சிவ பெருமானுக்கு பிடித்தமான ராசிகள் எவை தெரியுமா?
  • இதில் உங்கள் ராசியும் உள்ளதா?
சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் இவைதான்: சிவன் அருளால் ராஜவாழ்க்கை வாழ்வார்கள் title=

Favourite Zodiac Signs of Lord Shiva: இந்து சமயத்தின் முக்கியமான கடவுள் சிவபெருமான். அவர் எப்படி அவதரித்தார், எதிலிருந்து அவதரித்தார் என்பதெல்லாம் கண்டறிய முடியாமல் காலம் தொடங்கியது முதல், காலத்தின் தொடக்கமாகவே உள்ள கடவுள் சிவன். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாக அவர் இருக்கிறார்.

இந்து சாஸ்திரங்களில் மும்மூர்த்திகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. மும்மூர்த்திகளில் ஒருவராக உள்ள சிவபெருமான் பிறப்புன் இறப்பும் இல்லாதவர். கயிலாயத்தில் வாசம் புரியும் சிவ பெருமான், அண்ட சராசரங்களையும் காத்து ரஷிக்கிறார். அவர் அருளாலே அவர் தாள் பணிந்து அண்டம் இயங்குகிறது. தன் மனைவியான சக்திக்கு தன்னுடைய ஒரு பாதியை கொடுத்து ஆண் பெண் சமத்துவத்தை உலகுக்கு உணர்த்திய உன்னத கடவுள் சிவன்.

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியான சிவபெருமானுக்கு உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சமமே. அனைவர் மீதும் அவர் சமமான அன்பையும் ஆசியையும் பொழிகிறார். கிரகங்களால் ஏற்படும் இன்னல்களை சிவ பெருமான் போக்குகிறார். குறிப்பாக சனி பெயர்ச்சி, ஏழரை சனி காலங்களில் அவதியில் உள்ளவர்கள் சிவ பெருமானை துதித்தால், அவர்களுக்கு சிவன் உடனடியாக அருள் புரிகிறார்.

அனைத்து ராசிகள் மீதும் சிவ பெருமான் சமமாக அருளை பொழிந்தாலும், ஜோதிட கணக்கீடுகளில் படி, சில ராசிக்காரர்கள் சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்களாக இருக்கிறார்கள். சிவன் அருள் பெறுவதில் இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த ராசிக்காரர்கள் நினைத்த மாத்திரத்தில் அவர்களது வேண்டுதல்களை சிவன் நிறைவேற்றுகிறார். 

Maha Shivratri 2025: மகா சிவராத்திரி 2025

இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களும் கொண்டாடப்படும். சிவ பக்தர்கள் இந்த கொண்டாட்டத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ள நிலையில், சிவ பெருமானுக்கு பிடித்தமான அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Aries: மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மீது சிவ பெருமானின் ஆசிகள் எப்போதும் இருக்கும்.  சிவனின் அருளால் மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். இவர்களுக்கு வணிகத்திலும் நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அலுவலக பணிகளிலும் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள். 

Libra: துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மீது சிவபெருமானின் ஆசிகள் எப்போதும் நிலைத்திருக்கும். சிவபெருமானின் ஆசிர்வாதத்தால், இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். மேலும், சிவ பக்தியால் மகிழும் ராசிக்காரர்கள் இவர்கள். 

Capricorn: மகரம்

மகர ராசியும் ஈசனுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்றாகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகர ராசியின் அதிபதி சனி பகவான். மேலும் சனி பகவான் சிவனை தனது தெய்வமாகக் கருதுகிறார். ஆகையால், இந்த ராசிக்காரர்கள் சிவ பெருமானின் சிறப்பு ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள். சிவன் அருள் அவர்களது பொருளாதார நிலையை வலுவாக வைக்கிறது.  ஏழரை சனி (Ezharai Sani) காலத்திலும் மகர ராசிக்காரர்கள் சிவ பெருமானை வழிபட்டால், அனைத்து பிரச்சனைகளும் பனி போல் விலகும். 

Aquarius: கும்பம்

சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் கும்ப ராசியும் ஒன்று. சிவனின் அருளும் ஆசியும் இந்த ராசிகள் மீது எப்போதும் நிலைத்திருக்கும். இதன் காரணமாக அவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் சிவ பெருமான் மீது கொண்டிருக்கும் பக்தி காரணமாக அவர்கள் விரும்பிய பலன்களைப் பெறுகிறார்கள். இவர்களுக்கு சனி பெயர்ச்சி (Sani Peyarchi), ஏழரை சனி என சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிவன் அருளால் உடனடி தீர்வு கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தைப்பூசம்: தொடங்கும் நேரம் எப்போது? விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை..

மேலும் படிக்க | சனி பெயர்ச்சிக்கு முன் சனி அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நல்ல நேரம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News