17 கிலோ 3 மாதத்தில் போயே போச்சு... PCOS பிரச்னை இருந்த பெண் சொல்லும் வெயிட் லாஸ் டிப்ஸ்!

Weight Loss Journey: PCOS பிரச்னை இருந்த பெண் ஒருவர் 3 மாதங்களில் 17 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி என்ற தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 10, 2025, 01:53 PM IST
  • மேலும், இவர் PCOS பிரச்னைக்கான தேர்ச்சிபெற்ற பயிற்றுநராக உள்ளார்.
  • ஊட்டச்சத்து நிபுணராகவும் இவர் செயல்படுகிறார்.
  • இவர் இன்ஸ்டாகிராமில் பல பெண்களுக்கு உதவி வருகிறார்.
17 கிலோ 3 மாதத்தில் போயே போச்சு... PCOS பிரச்னை இருந்த பெண் சொல்லும் வெயிட் லாஸ் டிப்ஸ்! title=

Weight Loss Journey: உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல. இருப்பினும் நீங்கள் விடாமுயற்சியுடன் தொடர்ச்சியாக உடல் எடை குறைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் நீங்கள் நினைத்ததை செய்துகாட்டலாம். இருப்பினும், உடல் எடையை குறைக்க ஒவ்வொருவருக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. அதாவது, ஒருவர் பின்பற்றிய வழிமுறையை பின்பற்றி நீங்கள் உடல் எடையை குறைக்கலாம் என நினைக்க வேண்டாம்.

எனவே, நீங்கள் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை செய்து உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற உடல் எடை குறைப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும். மேலும், உடல்நலப் பாதிப்புகள் இருப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவ நிபுணரை சந்திக்காமல் உடல் எடை குறைப்பில் ஈடுபடக்கூடாது. இதில் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

Weight Loss Journey: PCOS பிரச்னை இருப்போர் கவனத்திற்கு...

தைராய்ட் அல்லது PCOS போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. PCOS பிரச்னை தற்போது பெண்களிடம் பரவலாக காணப்படுகிறது. பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மையே PCOS என்றழைக்கப்படுகிறது. இது, பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் சிக்கலை ஏற்படுத்தும். இயல்பான கருவுறுதல் சுழற்சியை சீர்குலைக்கும் எனலாம். ஹார்மோன் சமநிலையின்மை இருக்கும் போது உடல் எடையை குறைப்பதிலும் சில விஷயங்களை பெண்கள் கடைபிடித்தாக வேண்டும்.

மேலும் படிக்க | 41 கிலோவை குறைத்த பெண்... அதுவும் 15 மாசத்தில் - அவர் சாப்பாட்டில் செய்த பெரிய மாற்றம்!

Weight Loss Journey: PCOS உள்ளவர்களுக்கு உதவும் ரோஷினி சந்திரசேகர்

அந்த வகையில், ஊட்டச்சத்து நிபுணரும், PCOS சார்ந்த பயிற்றுநருமான ரோஷினி சந்திரசேகர் என்பவர தனது உடல் எடையை குறைப்பு அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதில், தான் PCOS பிரச்னையில் இருந்து தனது உடல் எடையை எப்படி ஆரோக்கியமாக குறைத்தார் என்பதை விளக்கி உள்ளார்.

இதன்மூலம், PCOS பிரச்னையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி வருகிறார். அவர்கள் PCOS பிரச்னையில் இருந்து வெளியே வருவதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறார். அதாவது, ஒவ்வொரு தனிநபருக்கும் ஏற்ற வகையில் உடல் எடை குறைப்புக்கு அவர் உதவி செய்கிறார்.

Weight Loss Journey: ரோஷினி சந்திரசேகரின் 8 வழிமுறைகள்

மேலும், PCOS பிரச்னையில் இருந்து விடுபட்டு, 3 மாதங்களில் 17 கிலோ உடல் எடையை குறைக்க அவர் பின்பற்றிய 8 வழிமுறைகளை ரோஷினி அவரது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்துள்ளார். இங்கு அவை கீழ்வருமாறு:

- டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு, காலையில் சீரகத் தண்ணீருக்கும், மதியம் CCF தேநீருக்கும் (சீரகம் கொத்தமல்லி வெந்தயம் சேர்க்கப்பட்டது), இரவு உணவிற்குப் பிறகு புதினா தேநீருக்கும் மாறினேன்.

- சிவப்பு இறைச்சி மற்றும் கோழிக்கறி சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். அதற்கு பதிலாக தேங்காய் சேர்க்கப்பட்ட கடல் உணவை உட்கொண்டேன்.

மேலும் படிக்க | 25 கிலோ எடை குறைந்த அஜித் குமார்! எப்படி தெரியுமா? ரகசியத்தை சொன்ன ஆரவ்..

- ஒவ்வொரு உணவிற்கும் 10 நிமிடங்களுக்கு முன்பு சாலட் சாப்பிடத் தொடங்கினேன். மேலும் தினமும் பச்சையாக கேரட் சாப்பிட்டு வந்தேன்.

- தினமும் காலையில் பூண்டு சேர்க்கப்பட்ட கீரையை வறுத்து சாப்பிட்டேன். இது என் மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்த உதவியது.

- குளுக்கோஸ் அதிகரிப்பை சமநிலைப்படுத்த ஒவ்வொரு உணவிற்கும் பிறகு 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வேன்.

- இரவு 12 மணிக்கு பதிலாக இரவு 10 மணிக்குள் தூங்கினேன்.

- என் வேலை இரவு 9:30 மணிக்கு முடிந்தாலும், இரவு உணவை 7 மணிக்குள் முடித்தேன்.

- இனிப்புக்கு பதிலாக காரமான காலை உணவை சாப்பிடுவேன்.

(பொறுப்பு துறப்பு: ரோஷினி சந்திரசேகர் PCOS பயிற்றுநராக சான்றிதழ் பெற்று, 2019ஆம் ஆண்டில் இருந்து 5000+க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவியுள்ளதாக அவர் இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இதனை ஜீ நியூஸ் [ZEE TAMIL NEWS] உறுதிசெய்யவில்லை. உங்களுக்கு தெரிந்த, நன்கு பரிட்சயப்பட்ட நிபுணரிடமும் நீங்கள் இதுகுறித்து ஆலோசனை செய்யலாம். )

மேலும் படிக்க | 129 கிலோவில் இருந்த பெண்... 50 கிலோவை அசலாட்டாக குறைக்க உதவியது எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News