மதம் பிடித்த கோயில் யானை.. குடியிருப்புகளுக்குள் புகுந்து மிரட்டல்! Viral Video

கேரளாவில் கோயில் யானைக்கு மதம் பிடித்து குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. 

Written by - R Balaji | Last Updated : Feb 9, 2025, 03:14 PM IST
  • மதம் பிடித்த கேரள யானை குடியிருப்புகளுக்குகள் புகுந்தது
  • அங்கிருந்த பைக்கை துவம்சம் செய்தது
  • இது தொடர்பான வீடியோ வைராகி வருகிறது
மதம் பிடித்த கோயில் யானை.. குடியிருப்புகளுக்குள் புகுந்து மிரட்டல்! Viral Video title=

கேரளாவில் கோயில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானை, சாலையில் இருந்த பைக்கை மிதித்து துவம்சம் செய்ததோடு குடியிருப்புக்குள் புகுந்து மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைக்கை துவம்சம் செய்த யானை 

கேரள மாநிலம்  மலப்புரம் அருகே நிலம்பூரில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக நேற்று (பிப். 08) கோவிந்தன் குட்டி என்ற யானை அழைத்து வரப்பட்டது. திருவிழா நடக்கும் இடத்திற்கு யானையை பாகன்கள் அழைத்துச் சென்றார். அப்போது திடீரென கோவிந்தன் குட்டி என்ற யானைக்கு மதம் பிடித்து மிரண்டு ஓடியது. 

பாகனின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் சென்ற யானை, வழியில் நிறுத்தப்பட்டு இருந்து பைக்கை மிதித்து உடைத்து துவம்சம் செய்தது. அதோடு குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்களையும் அச்சுறுத்தியது. பின்னர் ஒரு தோட்டம் போன்ற பகுதிக்கு சென்றது. இதனை பார்த்த ஒருவர் பயந்து ஓடினார். 

இதனை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகளை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வரும் நிலையில், வீடியோ வைரலாகி வருகின்றது. 

முன்னதாக பாகன் பலியான சோகம்

முன்னதாக கேரள மாநிலம் பாலக்காடு அருகே மதம் பிடித்த யானை, பாகனை மிதித்து கொன்ற வீடியோ வைராகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே நேர்ச்சை என்ற பெயரில் நேற்று முன்தினம் உற்சவம் நடந்தது. அப்போது அணிவகுப்பாக 47 யானைகள் வந்திருந்தன. பின்னர் திரும்பி சென்றபோது, திடீரென வள்ளம்குளங்கரை நாரயணன்குட்டி என்ற யானைக்கு திடீரென மதம் பிடித்து, பாகன் குஞ்சுமோன் (50) என்பவரை மிதித்து தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இது தொடர்பான வீடியோ வைரான நிலையில், தற்போது மீண்டும் ஒரு யானை குடியிருப்புக்குள் நுழைந்து அங்கிருந்த பைக்கை துவம்சம் செய்து மக்களையும் அச்சுறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் படிங்க: காஷ்மீர் டூர் போக ஆசையா? சென்னை - காஷ்மீர் இடையே சுற்றுலா ரயில்.. முழு விவரம் இதோ!

மேலும் படிங்க: "அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை" தோல்வி குறித்து உருக்கமாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News