Delhi Assembly Election Results 2025 Latest News: டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 அன்று முடிவடைந்து. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.39 சதவீதம் வாக்குகள் வதிவானது. டெல்லி மக்கள் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கும் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நாளை (பிப்ரவரி 8, 2024, சனிக்கிழமை) அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?
பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளன. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி (AAP) இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் சில அமைப்புகள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைக்கும் என்றும், டெல்லி தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைக்கும் எனக் கணித்துள்ளனர். மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சர் ஆகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளனர்.
டெல்லி தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை?
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தலா 70 வேட்பாளர்களையும், பாஜக 68 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன. அதே நேரத்தில் இரண்டு இடங்களில் அதன் கூட்டணிக் கட்சிகளான ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) போட்டியிடுகின்றன.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் போட்டி
முன்னாள் முதம் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையான போட்டி இருக்கும். புது தில்லி தொகுதியில், பாஜக மற்றும் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர்களின் மகன்களான பர்வேஷ் சாஹிப் சிங் மற்றும் சந்தீப் தீட்சித் ஆகியோரை நிறுத்தி உள்ளன.
டெல்லி தேர்தல் முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை 2024 பிப்ரவரி 8 ஆம் தேதி, சனிக்கிழமை நடைபெறும்.
டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை எத்தனை மணிக்கு தொடங்கும்?
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும்.
முதலில் எந்த வாக்குகள் எண்ணப்படும்?
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வாக்குகள் எண்ணப்படும்.
டெல்லி தேர்தல் முடிவுகளை எங்கு பார்க்கலா?
இந்திய தேர்தல் ஆணையத்தின் eci.gov.in என்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வ முடிவுகளைப் பார்க்கலாம். முடிவுகள் results.eci.gov.in என்ற போர்ட்டலிலும் நிகழ்நேரத்தில் காண்பிக்கப்படும்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் அப்டேட்
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் நேரடி அப்டேட் மற்றும் சமீபத்திய செய்திகளை காணவும், தொகுதி வாரியான முடிவுகள் குறித்த நேரடி புதுப்பிப்புகளைப் பெற தொடர்ந்து ZEE TAMIL NEWS சேனலுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க - டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025: முக்கிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல்!
மேலும் படிக்க - டெல்லி தேர்தல் 2025: தொகுதி வாரியாக அனைத்து கட்சி வேட்பாளர்களின் முழு பட்டியல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ