ரோஹித் சர்மா ஓய்வு... உள்ளே வரும் இந்த 2 முக்கிய வீரர்கள் - இந்திய அணியின் பிளேயிங் XI மாற்றம்!

India vs England: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் செய்யப்போகும் பெரிய மாற்றங்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 10, 2025, 11:01 PM IST
  • பிப்.12ஆம் தேதி இப்போட்டி நடைபெறுகிறது.
  • அகமதாபாத் நகரில் இப்போட்டி நடைபெறுகிறது.
  • சாம்பியன்ஸ் டிராபியை கணக்கிட்டு இந்த போட்டியை இரு அணிகளும் விளையாடும்.
ரோஹித் சர்மா ஓய்வு... உள்ளே வரும் இந்த 2 முக்கிய வீரர்கள் - இந்திய அணியின் பிளேயிங் XI மாற்றம்! title=

India vs England 3rd ODI: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் (பிப். 12) நடைபெறுகிறது.

இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டது. இங்கிலாந்து அணி தொடரின் ஆரம்பத்தில் இருந்தே சாம்பியன்ஸ் டிராபி தொடரை கவனத்தில் வைத்துதான் விளையாடி வருகிறது. அதனால், பிளேயிங் லெவனில் இங்கிலாந்து அதிரடி மாற்றங்களை செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

IND vs ENG: கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் யார்?

அதேபோல், இனி சாம்பியன்ஸ் டிராபி தொடர்தான் இந்திய அணியின் முழு கவனமாக இருக்கும். பும்ராவின் உடற்தகுதி இன்னும் சில நாள்களில் உறுதிசெய்யப்பட்டுவிடும், பும்ரா இல்லையெனில் கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக தற்போதைய ஸ்குவாடில் இருக்கும் ஹர்ஷித் ராணாவா அல்லது அனுபவ வீரர் முகமது சிராஜா இருவரில் யார் சாம்பியன்ஸ் டிராபிக்கு போவார் என்பதும் கேள்வியாக உள்ளது. 99%  ஹர்ஷித் ராணாவுக்கே வாய்ப்பு எனலாம்.

மேலும் படிக்க | பும்ரா சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவாரா.. பிசிசிஐ எடுத்துள்ள முடிவு என்ன? வெளியான தகவல்!

IND vs ENG: சாம்பியன்ஸ் டிராபிக்கு வருவாரா வருண்?

வருண் சக்ரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஸ்குவாடில் எடுக்கப்பட்டார், குல்தீப் இடத்தில் விளையாடினார். இப்போது அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கு வருவாரா என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி ஸ்குவாடுக்குள் வந்தால் நிச்சயம் வெளியேறப்போவது வாஷிங்டன் சுந்தர்தான். சுந்தர் வெளியேறினால் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களுக்கு மாற்று வீரர் இருக்காது. குல்தீப் மற்றும் வருண் இருவரும் பிளேயிங் லெவனில் விளையாடினாலும் நம்பர் 7 வரை பேட்டிங் இருக்கும்.

IND vs ENG: பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்

இத்தகைய சிக்கல்கள் குழப்பங்கள் இருப்பதால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஸ்குவாடில் வரும் பிப்.12ஆம் தேதிக்குள் இந்திய அணி என்னென்ன மாற்றங்களை செய்ய இருக்கிறது என்பது சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி உள்ளது. அதேபோல், நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும் போட்டியும் கூட ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யப்படுவதற்கு அதன் பிளேயிங் லெவன் முக்கிய காரணம். வரும் போட்டியில் அர்ஷ்தீப் சிங் நிச்சயம் ஷமி உடன் களமிறங்கப்படுவார், ஹர்ஷித் ராணாவுக்கு பதில்... அதேநேரத்தில், குல்தீப்பும் அணிக்கு திரும்புவாரா என்பது கேள்விக்குறியே.

IND vs ENG: கேப்டனாகும் கில்... களமிறங்கும் பண்ட்

அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆல்-ரவுண்டர்களாக தொடர்வார்கள். பேட்டிங்கில்தான் இன்னும் எக்கச்சக்கமான மாற்றங்களை பார்க்கலாம். முதலில், கேப்டன் ரோஹித் சர்மா 3வது போட்டியில் ஓய்வெடுத்து, கேப்டன் பொறுப்பை சுப்மான் கில்லிடம் கொடுக்கலாம். ஐபிஎல் தொடரில் விளையாடுவதால், சுப்மான் கில்லுக்கு நரேந்திர மோடி மைதானம் மிகவும் ராசியானதும் கூட. 

கில்லுடன் ஜெய்ஸ்வால் இறங்குவார். மேலும், கேஎல் ராகுலுக்கு பதில் ரிஷப் பண்டுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படலாம். அதாவது, இவை அனைத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும்போது அனைத்து வீரர்களும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பதையே நிரூபணம் செய்கிறது.

IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவன் (கணிப்பு)

சுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப்/வருண், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

மேலும் படிக்க | ஆர்சிபிக்கு தொடரும் சோகம்... இந்த வீரரும்காயத்தால் விலகல்? மாற்று வீரர்கள் யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News