2K லவ்ஸ்டோரி டிரெய்லர் வெளியீட்டு விழா!! இயக்குநர் சுசீந்திரன் உருக்கமான பேச்சு..

2K Love Story : இயக்குநர் சுசீந்திரனின்  "2K லவ்ஸ்டோரி" திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா. இதில் பிரபலங்கள் என்னென்ன பேசினார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

Written by - Yuvashree | Last Updated : Feb 10, 2025, 05:33 PM IST
  • 2கே லவ் ஸ்டோரி
  • டிரைலர் வெளியிடப்பட்டது
  • படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது
2K லவ்ஸ்டோரி டிரெய்லர் வெளியீட்டு விழா!! இயக்குநர் சுசீந்திரன் உருக்கமான பேச்சு.. title=

2K Love Story : City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம்   "2K லவ்ஸ்டோரி”. 

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா,  படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இசையமைப்பாளர் இமான் பேசியதாவது, இந்த திரைப்படத்தை இன்று காலை பார்த்த அத்தனை முக்கியமான இயக்குநர்களுக்கும், அவர்களுடைய நேரத்தை செலவிட்டு, இப்படம் பார்த்துப் பாராட்டிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இத்தனை குறுகிய காலத்தில், ஒரு திரைப்படத்தைத் திட்டமிட்டு, அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடிக்கக் கூடிய, ஒரே இயக்குநர் சுசீந்திரன் சார் மட்டுமே, அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உடலாலும், மனதாலும், பலத்தாலும் மிக நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் பல நண்பர்கள் உள்ளனர், அதில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.  இந்த திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள். 

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது, வெண்ணிலா கபடி குழு படத்திற்குப் பிறகு முதல் படம் போன்ற உணர்வை இந்தப்படம் தந்துள்ளது, இந்தப்படத்தை என் நெருங்கிய நண்பர்கள் இயக்குநர்களுக்குப் போட்டுக் காட்டினேன்  பார்த்து விட்டு வாழ்த்தியதற்கு நன்றி. இப்படத்திற்கு உறுதுணையாக இருந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. என் உடன் நின்ற இசையமைப்பாளர் இமானுக்கு நன்றி. புதுமுகமாக அறிமுகமாகும் ஜெகவீருக்கு வாழ்த்துக்கள், துஷ்யந்த் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள், மீனாக்ஷிக்கு வாழ்த்துக்கள், அனைத்து நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கும் விக்னேஷுக்கு நன்றி, இப்படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும், அனைவருக்கும் நன்றி.  வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில்  மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்  பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் படிக்க | காதலர் தினத்தன்று வெளியாகும் 7 படங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க..

மேலும் படிக்க | அசோக் செல்வனின் அடுத்த படம்..ஸ்டார் பட நாயகியுடன் நடிக்கிறார்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News