Thaipusam 2025 When Is It Starting How To Take Viratham : ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி விரதம் சக்தி வழிபாட்டிற்கு உகந்ததாக அமைந்திருக்கும். ஆனால் வைகாசி, தை, பங்குனி, சித்திரை, கார்த்திகை ஆகிய மாதங்கள் முருகனுக்குரிய வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விரதங்கள் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. அப்படி தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பெளர்ணமி இணைந்து வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசம் தொடங்கும் நேரம்:
இந்த ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 11ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. பிப்ரவரி 10ம் தேதி இரவு 06:00 மணி துவங்கி, பிப்ரவரி 11ம் தேதி இரவு 06:34 வரை பூசம் நட்சத்திரம் இருந்தாலும் பெளர்ணமி திதி, பிப்ரவரி 11ம் தேதி இரவு 06:55 மணிக்கு தான் துவங்குகிறது.
பிப்ரவரி 12 ம் தேதி பெளர்ணமி திதி இருந்தாலும், அன்றைய தினம் பூசம் நட்சத்திரம் கிடையாது. இதனால் எந்த நாளை தைப்பூசமாக கருதி வழிபட வேண்டும்? எந்த நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு, அவரது அருளை பெற வேண்டும் என்ற குழப்பம் பக்தர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சரியான விளக்கத்தை இங்கு பார்ப்போம்.
நேரத்திற்கான விளக்கம்:
தைப்பூசம் என்பது நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஒரு விரதமாகும். அதன்படி பூச நட்சத்திரத்தை தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் பிப்ரவரி 11ம் தேதியை தான் தைப்பூச நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது மட்டுமின்றி இரவு 06:55 மணிக்கு பிறகு தான் பெளர்ணமி திதி துவங்குவதால், அன்று மாலை முதலே பெளர்ணமி திதி இருப்பதாக தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதனால் பெளர்ணமி, பூசம் நட்சத்திரம் இரண்டு இருக்கும் நாளாக பிப்ரவரி 11ம் தேதி தான் அன்றைய தினம் தான் விரதம் இருக்க வேண்டும். அதாவது பிப்ரவரி 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களில் எந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டாலும் அதற்கு மிகப் பெரிய பலன் உண்டு. \
காரணம் 1 :
பிப்ரவரி 10ம் தேதி பிரதோஷ விரதம்.
காரணம் 2 :
பிப்ரவரி 11ம் தேதி தைப்பூச விரதம்.
காரணம் 3 :
பிப்ரவரி 12ம் தேதி பெளர்ணமி விரதம்.
அதனால் இந்த மூன்று நாட்களுமே சிறப்பு வாய்ந்தவையாகும். முருகனுக்கு தைப்பூச விரதம் இருக்க வேண்டும் என்பவர்கள், ஒரு நாள் தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் பிப்ரவரி 11ம் தேதி காலை துவங்கி, மாலையில் விரதத்தை நிறைவு செய்து விடலாம்.
விரதம் முடித்து சாப்பிட வேண்டியது..
தைப்பூச விரதத்தை முடித்து, முருகனை வணங்கிய பிறகு அரிசியால் மற்றும் உப்பு சேர்க்கும் ஆகாரங்களை சாப்பிடக்கூடாது. அதற்கு பதிலாக பால், பழம், கோதுமை மாவு தோசை (உப்பு போடாமல்) உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளலாம். இந்த விரதம், கணவன்-மனைவியை சேர்க்கும் விரதம் எனக்கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | தொட்டதெல்லாம் துலங்கும் ‘தைப்பூசம்’ திருநாள்... விரதம் இருப்பது எப்படி?
மேலும் படிக்க | தைப்பூசம் தோன்றிய வரலாறு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ