மகளிர் உரிமை தொகை... அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு! தொகை அதிகரிக்குமா?

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் "மகளிர் உரிமை தொகை" நீட்டிக்கப்படும் என்று கூறப்படும் வதந்திகள் தவறானவை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Feb 11, 2025, 08:17 AM IST
  • மகளிர் உரிமை தொகையில் விரிவாக்கம்?
  • அடுத்த வாரம் வெளியாகும் முக்கிய அறிவிப்பு.
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி.
மகளிர் உரிமை தொகை... அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு! தொகை அதிகரிக்குமா? title=

வரும் வாரங்களில் தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 மாத கால அவகாசத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து தகுதியான பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும், ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கும் கால தாமதம் ஆவதாக தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் உறுதி

மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த புதிய விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்குள் பணம் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தகுதியான எந்த பெண்ணும் இந்த திட்டத்தில் பலன் பெற வேண்டும் என்பதே அரசின் உறுதிப்பாடு என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க | வங்கி நகை கடன் தள்ளுபடி! தமிழக அமைச்சர் பெரியகருப்பன் சொன்ன முக்கிய தகவல்!

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் "மகளிர் உரிமை தொகை" நீட்டிக்கப்படும் என்று கூறப்படும் வதந்திகள் தவறானவை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். மகளிர் உரிமை தொகையை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ள நிலையில், தகுதியான பெண்களுக்கு மட்டும் கிடைப்பதை அரசு சரிபார்த்து வருகிறது. தகுதியான அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும், ஆனால் தகுதி இல்லாதவர்களுக்கு நிதி ஒதுக்க முடியாது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

புதிய ரேஷன் கார்டு

தற்போது தேர்தல் காலம் முடிவடைந்த நிலையில், புதிய ரேஷன் கார்டு வினியோகம் படிப்படியாக துவங்கி, பலருக்கு ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஏராளமான விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் கார்டு வழங்காதது குறித்தும், புதிய விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்யாதது குறித்தும் புகார்கள் தொடர்ந்து வருகின்றன. சமீபகாலமாக தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. புதிதாக திருமணமான பலர், சமீபத்தில் புதிதாக குடியேறியவர்கள் மற்றும் தனிக்குடுத்தனம் சென்றவர்கள் என அனைவரும் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர். மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை எட்டியுள்ளது. இன்னும் வழங்கப்படாத மீதமுள்ள ரேஷன் கார்டுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தி தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க ரேஷன் கடைகளை நம்பியுள்ள ஏராளமான மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் சுமார் 1 லட்சம் பேருக்கு இன்னும் புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்கவில்லை, 1.80 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான புதிய நடைமுறைகளால் விண்ணப்பதாரர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக புகார்கள் வந்துள்ளன. ஆனால், அந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, ரேஷன் கார்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. பல விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. லோக்சபா தேர்தலின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், சரிபார்ப்பு செயல்முறைகள் நடைபெறாமல் தடுக்கப்பட்டதே தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யார் யாருக்கு கிடைக்காது?

ஏற்கனவே ஓய்வூதியம் பெறும் அல்லது பிற அரசாங்க நிதிகளை பெறக்கூடிய பெண்கள் தற்போது இந்த மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெற தகுதியற்றவர்கள். எதிர்காலத்தில் திட்டம் விரிவுபடுத்தப்படும் போது அவர்கள் பலன் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, ஆவணங்கள் ஒழுங்காக இல்லாத பெண்களும், சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு தங்கள் குடும்பத் தலைவர்களாக மாறியவர்களும் மீண்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் விரிவாக்கம் தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிங்க: "அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை" தோல்வி குறித்து உருக்கமாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News