Eat Garlic Daily For Healthy Skin : நம் அனைவருக்குமே சருமத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கி, முகம் பளபளப்பாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கு சில பொருட்கள் உதவினாலும் அவற்றை சருமத்தை தடவ வேண்டியதாக இருக்கும். ஆனால் முகம் பளபளப்பாகவும் அழகாகவும் நாம் என்ன சருமத்தில் தடவுகிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல. நாம் இன்னும் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமாகும்.
வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியது..
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய வேறு எதுவும் அல்ல, ஒரு பல் பூண்டுதான். முகம் அழகாக வேண்டும் என்ற நோக்கில் நாம் ஏதேதோ கிரீம்களை வாங்கி முகத்தில் தடவுகிறோம். இது சில சமயங்களில் பயனுள்ளதாக இருக்கும் பல சமயங்களில் கை கழுவி விட்டுவிடும். ஆனால் கிச்சனில் உள்ள சில பொருட்கள் மூலமாகவே எந்த செலவு இன்றி நாம் சருமத்தை பளபளப்பாக மாற்றலாம். அதில் ஒன்றுதான் பூண்டு. இந்த சிம்பிளான உணவு பொருள் ஆனது ஆன்டி-ஆக்ஸிடன்ஸ், விட்டமின்கள், மினரல் உள்ளிட்ட பலவித சத்துக்கள் அடங்கியதாக இருக்கிறது.
சமையலைத் தாண்டி நமது ஆரோக்கியத்திற்கும் உதவும் உணவுப்பொருட்கள் இது ஒன்று. இதில் நமது சருமத்தை பாதுகாக்கும் சில காரணிகளும் இருக்கின்றன. இதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவுடன் இருக்குமாம்.
அழற்சி எதிர்ப்பு காரணிகள்
பூண்டில் அழற்சி எதிர்ப்பு காரணிகள் இருக்கின்றன. இதனால் முகத்தில் ஏற்படும் பருக்கள் வராமல் தடுக்கலாம். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சருமத்தில் அடிக்கடி ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.
டீடாக்ஸ் ஆகும்:
உடலை டேட் ஆஃப் ஆகும் சில காரணிகள் பூண்டில் இருப்பதாக நம்பப்படுகிறது. கல்லீரல் மற்றும் நமது உடலில் இருக்கும் பாகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற இதனை சாப்பிடலாம். முகத்தைக் கெடுக்கும் கெட்ட டாக்ஸின்களை வெளியேற்றவும் பூண்டு உதவுகிறது.
சரும செல்களை பாதுகாக்கிறது:
இளம் வயதிலேயே நமக்கு முதுமையான தோற்றத்தை அளிக்கும் சில செல்கள் இருக்கின்றன. இவைதான் சருமத்தில் சுருக்கம் உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்றன. வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டை தினமும் சாப்பிடுவதால் இப்படி சீக்கிரமே வயதான தோற்றம் வருவதை தடுக்கலாம். தர்மமும் எப்போதும் இளமையுடன் பொலிவாக இருக்கும்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்:
காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிடுவது நம் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஒரு சில ஆராய்ச்சிகளின் படி பூண்டு நம் உடலுக்கு தேவையான புரதத்தை அளித்து, முகம் பொலிவாவதற்கு உதவுகிறது. ரத்த ஓட்டம் உடலில் சீறாவதால் இது ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சரும பாதிப்புகளை தடுத்து நிறுத்த:
பூண்டில் பூஞ்சை எதிர்ப்பு சக்தி இருக்கிறது. எனவே இது தொடர்பான பிரச்சனைகளுக்கும் பூண்டு உதவுகிறது. சரும இன்பெக்சன் அதிகரிக்கும் உள்ளிருக்கும் பூஞ்சை சக்தியை கட்டுப்படுத்த தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டை சாப்பிடலாம். இதனால் சரும பாதிப்புகள் தடுத்து நிறுத்தப்படுவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும் படிக்க | கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் உங்களுக்கும் வேண்டுமா? காலையில் ‘இதை’ பண்ணுங்க..
மேலும் படிக்க | சருமம் என்றென்றும் இளைமையாக இருக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ