Tips To Find A Matured Person : உங்களுடன் இருக்கும் நண்பர்கள் அல்லது உங்களை விட வயதில் பெரியவர்கள் கூட மனதளவில் முதிர்ச்சி பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். வயதானவர் மட்டும் ஒருவருக்கு மெச்சூரிட்டி வந்து விடாது. மனதளவில் முதிர்ச்சி பெற அந்த நபர் அதற்கென்று முயற்சி செய்ய வேண்டும். இப்படி இருப்பவர்களை கண்டுபிடிக்க அவர்கள் செய்யும் சில விஷயங்களை கண்காணித்தாலே போதும். அப்படி மனமுதிர்ச்சி பெற்றவர்களை கண்டுபிடிப்பதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.
முடிவெடுத்தல்:
ஒருவர் மனதளவில் முதிர்ச்சி பெற்று இருக்கிறாரா இல்லையா என்பதை அவர் முடிவெடுக்கும் திறனை வைத்து கண்டுபிடித்து விடலாம். இவர்கள் மனதளவில் மிகுந்த உறுதியோடு இருப்பதோடு தங்களுக்கென்று சில நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு வாழ்வர். அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். நெருங்கியவர்கள் தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்டுவர்.
பிறரை மெத்தனமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்..
ஒரு சிலர் தங்களிடம் ஒருவர் அன்பாக பாசமாக பழகுகிறார் என்றால் அவரை பிற விஷயங்களுக்கும் பயன்படுத்திக் கொள்வர். ஆனால் மனதளவில் முதிர்ச்சி பெற்ற ஒருவர் தங்களுடன் இருப்பவர்களை எந்த விஷயத்திற்காகவும் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் கூட அதை சரியான வழியில் பயன்படுத்துவார்களே அன்றி அதை துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள்.
கொடுத்த வாக்கை காப்பாற்றுவர்..
மனதளவில் முதிர்ச்சி பெற்றவர்கள் யாரிடமாவது ஒரு வாக்கு கொடுத்தார்கள் என்றால் அதை ஒருபோதும் தவற விடமாட்டார்கள். அதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்றால் கூட அதை முடித்துக்கொடுக்க நினைப்பர். நேரத்திற்கு வேலைக்கு வருவதிலிருந்து, ஒருவரை சந்திக்கிறேன் என கூறினால் அவரை சந்திப்பதுவரை அவர்கள் என்ன கூறினாலும் தங்கள் வார்த்தைக்கும் வாக்குக்கும் உண்மையாக இருப்பர்.
தனக்காகவும் பிறருக்காகவும் பேசுவர்..
ஒரு சிலர் தன் வேலை ஆனால் போதும், தனக்கு நல்லது நடந்தால் போதும் என்று இருப்பர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே, தான் துன்பப்பட்டாலும் தன்னைப் போல பிறர் துன்பப்பட்டாலும். தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது என பார்க்கும் அவர்கள், யாருக்கேனும் தன் முன் அநீதி நேர்ந்தால் அதை தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
உணர்ச்சி அறிவுடன் இருப்பர்..
மனதளவில் முதிர்ச்சி பெற்ற ஒருவருக்கு, முதிர்ச்சி அறிவும் மிகுதியாக இருக்கும். கோபம், காதல், காமம் என எந்த உணர்வு வந்தாலும் அதை எப்படி கையாள வேண்டும் என்பது இவர்களுக்கு தெரியும். இதனால்தான் இவர்களால் எந்த கடினமான சூழலிலும் பாசிட்டிவாக இருக்க முடிகிறது. தனக்கு ஒருவர் பாராட்டுகளை தெரிவித்தாலும் அல்லது விமர்சனத்தை தெரிவித்தாலும் அவர்கள் ஒரே நிலையில்தான் அதை எடுத்துக் கொள்வர். தன்னைச் சுற்றி இருக்கும் சூழல் பரபரப்பாக இருந்தாலும் கூட இவர்கள் ரிலாக்ஸாக இருப்பார்கள். இதனால் அவர்களால் நடுநிலையுடன் எந்த முடிவையும் தெளிவாக எடுக்க முடியும்.
பிறரை புரிந்து கொள்வர்..
தற்போதைய காலகட்டத்தில் பலருக்கு புரிந்துணர்வு என்பது இல்லாமலே போய்விட்டது. ஆனால் மனதளவில் முதிர்ச்சி பெற்ற ஒருவர், தண்ணி புரிந்து கொள்வதோடு மட்டுமின்றி தன்னை சுற்றி இருப்பவர்களையும் நன்றாக புரிந்து கொள்வர். பிறர் தன் முன் ஜெயிக்கும் போது அவர்களுக்காக முழு மனதுடன் கைதட்டுவர். ஒருவரின் வெற்றி என்பது இன்னொருவரின் தோல்வியை குறிப்பதில்லை என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள்.
தன்னை அறிதல்..
தன்னை அறிதல் என்பது இங்கிருக்கும் பலரிடம் இல்லாத ஒரு திறன் ஆகும். மனதளவில் முதிர்ச்சி பெற்றவர்கள் தன் மனதை நன்கு அறிந்தவர்களாக இருப்பர். தன்னிடம் இருக்கும் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்ளுங்கள் எதை வளர்க்க வேண்டும் எதை வளர்த்துக்கொள்ளக்கூடாது என்று தெரிந்து கொள்வர்.
மேலும் படிக்க | உங்களின் ரகசிய எதிரிகளை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ மாதிரி நடந்து கொள்வார்கள்!
மேலும் படிக்க | பொய் பேசுகிறார்கள் என்பதை எப்படி ஈஸியாக கண்டுபிடிப்பது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ