ஆதார் கார்டு போட்டோ அசிங்கமா இருக்கா? ஈஸியாக மாற்றலாம் - லேட்டஸ்ட் அப்டேட்

Aadhaar photo | ஆதார் கார்டு புகைப்படம் அசிங்கமாக இருக்கிறது என நீங்கள் நினைத்தால் அதனை வீட்டில் இருந்தபடியே எப்படி புதுப்பிக்கலாம் என்பதன் லேட்டஸ்ட் அப்டேட்டை தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 7, 2025, 07:11 PM IST
  • ஆதார் கார்டு போட்டோ அப்டேட்
  • ஆதார் புகைப்படம் மாற்ற வேண்டுமா?
  • லேட்டஸ்ட் அப்டேட் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
ஆதார் கார்டு போட்டோ அசிங்கமா இருக்கா? ஈஸியாக மாற்றலாம் - லேட்டஸ்ட் அப்டேட் title=

Aadhaar card photo update | பலருக்கும் ஆதார் கார்டு புகைப்படம் நன்றாக இல்லை என்ற கவலை இருக்கிறது. அதில் ஒருவர் நீங்களுமா?. உங்கள் ஆதார் கார்டு புகைப்படம் பிடிக்கவில்லை என்றால் கவலை வேண்டாம்! UIDAI இணையதளத்தின் மூலம் புகைப்படத்தை மாற்றுவது எளிதானது. ஆதார் சேவா கேந்திரம் அல்லது ஆதார் பதிவுமையத்திற்கு சென்று புதிய புகைப்படத்துடன் உங்கள் ஆதார் கார்டை புதுப்பிக்கலாம். இது குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

ஆதார் கார்டு புகைப்படம் மாற்றுவது எப்படி?

1: UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் – https://uidai.gov.in/en/

2: ஆதார் பதிவுப் படிவத்தை பதிவிறக்கி பிரிண்ட் எடுக்கவும்

3: படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும்

4: உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவுமையம் அல்லது ஆதார் சேவா கேந்திரத்திற்கு சென்று நிரப்பிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

5: உங்கள் பயோமெட்ரிக் தகவல்களை வழங்கவும்

6: அங்குள்ள அதிகாரி நேரடியாக உங்கள் புகைப்படத்தை எடுத்துக் கொள்ளும்

7: புகைப்படம் புதுப்பிக்கப்பட்ட பிறகு, Update Request Number (URN) கொண்ட அங்கீகார சீட்டு வழங்கப்படும்.

ஆதார் புகைப்படம் புதுப்பிக்க முக்கிய தகவல்கள்:

* ஆதார் புகைப்படம் மாற்ற எந்தவித ஆதார ஆவணமும் தேவையில்லை.

* நீங்கள் உங்களது புகைப்படத்தை கொண்டு செல்ல தேவையில்லை; அதிகாரி நேரடியாக எடுத்துக் கொள்வார்.

* புதுப்பித்த தகவல்கள் 90 நாட்கள் வரை எடுக்கலாம்.

* URN எண்ணை பயன்படுத்தி ஆன்லைனில் உங்கள் ஆதார் புதுப்பிப்பு நிலையை கண்காணிக்கலாம்.

* Self-Service Update Portal (SSUP) மூலமாக ஆன்லைனில் புகைப்படத்தை மாற்ற முடியாது.

புகைப்படம் புதுப்பித்த பிறகு ஆதார் கார்டை பதிவிறக்குவது எப்படி?

* UIDAI இணையதளத்திற்கு செல்லவும்

* "My Aadhaar" > "Download Aadhaar" என்பதைக் கிளிக் செய்யவும்

* உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்

* "Send OTP" பொத்தானை கிளிக் செய்யவும்

* உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும், அதை உள்ளீடு செய்து புகுபதிகை செய்யவும்

* "Download Aadhaar" பொத்தானை அழுத்தி புதிய ஆதார் கார்டை பதிவிறக்கி, பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்

மேலும் படிக்க | பட்ஜெட் 2025 : ஆதார் விதிமுறையில் வந்த மிகப்பெரிய மாற்றம் - மத்திய அரசு ஒப்புதல்

மேலும் படிக்க | அவசரமாக ரூ.2 லட்சம் கடன் வேண்டுமா... ஆதார் அட்டை போதும் - எப்படி வாங்குவது?

இதன் மூலம் உங்கள் ஆதார் கார்டின் புகைப்படத்தை எளிதாக புதுப்பிக்கலாம்! 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News