கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: பறிபோன துளசியின் வேலை, உடையும் அடுத்த உண்மை

Kettimelam Today's Episode Update: பறிபோன துளசியின் வேலை, கழுத்தை நெறிக்கும் பைனான்சியர், உடையும் அடுத்த உண்மை - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2025, 03:59 PM IST
  • கெட்டி மேளம் : இன்றைய எபிசோட்.
  • துளசியிடம் சமாளிக்கும் வெற்றி.
  • சிவராமனை போன் போட்டு அழைக்கும் பைனான்சியர்.
கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: பறிபோன துளசியின் வேலை, உடையும் அடுத்த உண்மை title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கெட்டி மேளம்’ சீரியல்.

கெட்டி மேளம் : இன்றைய எபிசோட் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி கோவிலில் வைத்து துளசியை சந்தித்து சந்தோஷமடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

துளசியிடம் சமாளிக்கும் வெற்றி

அதாவது, அடுத்த நாள் காலையில் வெற்றி துளசியை பஸ் ஸ்டாப்பில் வைத்து பார்க்க அவளை பச்சை கலர் சுடிதார் என கூப்பிட துளசி என்னவென்று கேட்க என் அத்தை பொண்ணு என நினைத்து கூப்பிட்டதாக சமாளிக்கிறான். 

அடுத்து ஆபிஸ் வரும் துளசி ஸ்ரீகாந்த் ரூமுக்கு சென்று போட்டோவை பார்த்து வருத்தப்பட அப்போது அங்கு வந்த ஜெகன் நீங்க மெயில் பார்க்கலயா? உங்களை டெர்மினேட் பண்ணியாச்சு, இனிமே உங்களுக்கு இங்கே வேலை இல்லை என்று ஷாக் கொடுக்கிறான். 

சிவராமனை போன் போட்டு அழைக்கும் பைனான்சியர்

துளசி ஓரே முறை தியாவை பார்க்க அனுமதி கேட்க அதெல்லாம் பார்க்க முடியாது, வெளியே போறியா? செக்யூரிட்டி கிட்ட சொல்லி கழுத்தை பிடித்து தள்ளவா என்று துரத்தி விடுகிறான். மறுபக்கம் சிவராமனை போன் போட்டு அழைக்கும் பைனான்சியர் உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்ல, கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்க இல்லனா அந்த இடத்தை என் பேருக்கு மாத்தி எழுந்துங்க என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். 

துளசி வீட்டிற்கு வந்து வேலை போன விஷயத்தை சொல்ல சிவராமன் பைனான்சியர் பணத்தை கேட்ட விஷயத்தை சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். சிவராமனின் பிள்ளைகள் அந்த இடத்துல எங்களுக்கும் பங்கு இருக்கு, எங்களை கேக்காமல் எப்படி அடமானம் வைக்கலாம் என்று சத்தம் போடுகின்றனர். 

இந்த சமயத்தில் பதறி போய் வீட்டிற்கு வரும் பைனான்சியர் டாகுமெண்ட்டை கொடுத்து ஐயா மன்னிச்சுருங்க, நீங்க பெரிய பாஸோட ஆளுனு சொல்லி இருக்கலாமே என்று சொல்கிறார். நீங்க பொறுமையா பணத்தை கொடுங்க, பெரிய பாஸ் கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு மட்டும் சொல்லிடுங்க என்று கிளம்பி செல்கிறார். 

வீட்டில் இருக்கும் பாட்டி எல்லா அந்த பையன் வந்து அஞ்சலியை பொண்ணு கேட்டுட்டு போன பிறகு தான் நல்லாதவே நடக்குது, அந்த தம்பியை பார்த்து பேசி முடிக்க வேண்டியது தானே என்று சொல்ல சிவராமன், லட்சுமி மகேஷை பார்க்க கிளம்பி வருகின்றனர். 

அப்போது மகேஷ் பணக்கார பையனாக இருந்தாலும் எல்லாருக்கும் உதவும் குணம் கொண்டவர் என அறிந்து கொள்கின்றனர். இந்த சமயத்தில் மீண்டும் போன் செய்யும் பைனான்சியர் பெரிய பாஸ் கிட்ட மட்டும் சொல்லிடுங்க என்று கெஞ்ச சிவராமன் விசிட்டிங் கார்டில் இருக்கும் மகேஷ் நம்பருக்கு போன் செய்து நன்றி சொல்கிறார். 

அப்போது தான் அந்த பெரிய பாஸ் மகேஷ் என்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கல்லூரி மாணவராக நடிக்கும் சிம்பு? STR 49 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

மேலும் படிக்க | “ஊர்வசி..ஊர்வசி” எட் ஷீரன் இசை நிகழ்ச்சியில் மாஸ் காட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News