India vs England ODI Latest News Updates: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு (IND vs ENG) இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (பிப். 6) நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சர்ப்ரைஸ் இருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், இந்தளவிற்கு யாருமே எதிர்பார்க்கவில்லை.
விராட் கோலி கால் முட்டி காயத்தால் (Virat Kohli Injury) நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்ரவர்த்திக்கும் இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி அணியில் இருக்கும் அர்ஷ்தீப் சிங்கிற்கும் வாய்ப்பில்லை.
India vs England: பும்ராவுக்கு பதில் யார்?
அதே நேரத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன், ஹர்ஷித் ராணாவும் ஓடிஐ போட்டியில் நேற்று அறிமுகமானார். பும்ரா உடற்தகுதிபெறாவிட்டால், ஹர்ஷித் ராணாவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் (Champions Trophy 2025) இடம்பெறுவார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்க, நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி (Team England) முதலில் பேட்டிங் செய்தபோது, பவர்பிளேவில் அதிரடியாக விளையாடியபோது மட்டுமே இந்திய அணி ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர்.
India vs England: சரணடைந்த இங்கிலாந்து அணி
ஆனால், பில் சால்ட்டின் ரன் அவுட்டுக்கு பின் இங்கிலாந்து அணி அதன் ஆதிக்கம் அனைத்தையும் இந்தியாவிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டது. பேட்டிங்கில் போராடி 248 ரன்களை அடித்தாலும், இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி (Team India) இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
இந்திய அணி பந்துவீச்சில் ஹர்ஷித் ராணாவும், ஜடேஜாவும் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது ஷமியும் நல்ல ரிதமில் இருந்தார். பேட்டிங்கை பொறுத்தவரை கில் 87, ஷ்ரேயாஸ் 59, அக்சர் பட்டேல் 52 என பலமான மிடில் ஆர்டர் இந்திய அணிக்கு கைக்கொடுத்தது.
மேலும் படிக்க | இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பும்ரா! பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!
India vs England: ஷ்ரேயாஸ் ஐயர் பேசியது... ஷாக்
நேற்று ஜெய்ஸ்வால் களமிறங்கியபோது பலரும் விராட் கோலி இல்லாததால்தான் அவர் இந்த போட்டியில் விளையாடுகிறார் என நினைத்தனர். ஆனால், கம்பீரின் திட்டமே இங்கு வேறாக இருந்துள்ளது. போட்டிக்கு பின் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) பேசியதை முதலில் பாருங்கள்,"நேற்று (அதாவது நேற்று முன்தினம் - பிப். 5) இரவு ஒரு படம் பார்த்துக்கொண்டிருந்தேன், அப்படியே இரவு முழுக்க பார்க்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால் பின்னர் கேப்டனிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. விராட்டின் முழங்கால் வீங்கியிருப்பதால் நீங்கள் விளையாட வேண்டிவரும் என்று கூறினார். பின்னர், என் அறைக்குத் திரும்பி, உடனடியாக தூங்கிவிட்டேன்" என்றார்.
India vs England: இந்திய அணியின் திட்டம் என்ன?
ஆம், இனி ரோஹித் - ஜெய்ஸ்வால் தான் பிரதான ஓப்பனர்களாக பார்க்கப்படுகின்றனர். சுப்மன் கில் (Shubman Gill) நம்பர் 3இல் தான் களமிறக்கப்படுவார். விராட் கோலிக்கு நம்பர் 4 இடம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று விராட் கோலி இல்லாததால் தான் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கியிருக்கிறார். ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த சில மாதங்களாகவே இந்திய அணி நிரந்தர இடமில்லாமல் இருந்தாலும் ஓடிஐ அணியில் நம்பர் 4 ஸ்பாட் அவருக்கானது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
India vs England: இந்திய அணிக்கு பெரிய சிக்கல்
கடந்த 2023 உலகக் கோப்பையில் இந்த இடத்தில் இறங்கிய 500+ ரன்களை குவித்தார். நேற்றும் 36 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸ்ர்களுடன் 59 ரன்களை குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் 163.89. ஆர்ச்சர் போட்ட 2 ஷார்ட் பிட்ச் பந்துகளையும் அடுத்தடுத்து சிக்ஸர் பறக்கவிட்டபோதே, அவர் நல்ல பார்மில் இருப்பது தெரியவந்தது.
அப்படியிருக்க, விராட் கோலி அடுத்த போட்டிக்கு உடற்தகுதி பெற்று உள்ளே வரும்போது ஷ்ரேயாஸ் ஐயரை நீங்கள் வெளியே உட்காரவைப்பது சரியாக இருக்காது. ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) தற்போதுதான் ஓடிஐ தொடருக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார், அவருக்கும் நிச்சயம் தொடர் வாய்ப்புகள் வேண்டும். எனவே, அடுத்த போட்டியில் விராட் கோலி வந்தால் ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் இருவரில் கம்பீர் யாரை உட்கார வைப்பார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
மேலும் படிக்க | ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் விராட் கோலி? உரிமையாளர் சொன்ன பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ