ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி: அரசின் பரிசு, ஓய்வூதிய நடைமுறைக்கான புதிய போர்டல்

Central Government Pesioners: மத்திய அரசு ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இந்த பதிவில் அதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2025, 03:14 PM IST
  • ஓய்வூதியதாரர்களுக்கு அதிக வசதிகள்.
  • பவிஷ்ய போர்டல் எவ்வாறு செயல்படுகிறது?
  • ஓய்வூதியம் தொடர்பான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி: அரசின் பரிசு, ஓய்வூதிய நடைமுறைக்கான புதிய போர்டல் title=

Central Government Pesioners: மத்திய அரசு ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இந்த பதிவில் அதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

Retired Central Government Employees: ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய செயல்முறையை எளிமையாக்கவும் வெளிப்படையானதாக்கவும் மாற்றும் நோக்கத்துடன் இந்திய அரசு பவிஷ்ய போர்ட்டலைத் தொடங்கியுள்ளது. இந்த போர்டல் ஓய்வூதிய செயல்முறையை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கவும், அனைத்து ஓய்வூதிய கொடுப்பனவுகளும் சரியான நேரத்தில் செலுத்தப்படுவதையும் உறுதி செய்ய உதவுகிறது.

Bhavishya Portal: பவிஷ்யா போர்டல் ஓய்வூதியதாரர்களுக்கான ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது

Online Pension Application: ஆன்லைன் ஓய்வூதிய விண்ணப்பம்

ஓய்வுபெற்ற ஊழியர்கள் இப்போது eSign மூலம் ஆன்லைனில் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதனால் கைமுறை செயல்முறைகளில் ஆகும் நேரம் வெகுவாக குறையும்.

Tracking Pension Case: ஓய்வூதிய வழக்கைக் கண்காணித்தல்

இனி ஓய்வு பெறும் ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய வழக்குகளின் நிலையை அறிய அலுவலகங்களைச் சுற்றி அலைய வேண்டியதில்லை. இந்த போர்டல் ஓய்வூதியதாரர்களுக்கு கண்காணிப்பு வசதியை வழங்குகிறது. இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் வழக்குகளின் முன்னேற்றத்தை ஆன்லைனில் செக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Electronic Pension Payment Order: ePPO வசதி

ePPO (மின்னணு ஓய்வூதிய கட்டண ஆணை) பவிஷ்யா போர்டல் மூலம் வழங்கப்படுகிறது. இதை டிஜி லாக்கரிலும் சேமிக்க முடியும். இது ஆவணக் கையாளுதலை எளிதாக்குகிறது.

Pension: ஓய்வூதியம் தொடர்பான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்

ஓய்வூதிய சீட்டு, படிவம் 16 மற்றும் ஆயுள் சான்றிதழ் ஆகியவற்றின் நிலை குறித்த அனைத்து தகவல்களும் போர்ட்டலில் எளிதாகக் கிடைக்கின்றன.

பவிஷ்ய போர்டல் எவ்வாறு செயல்படுகிறது?

பவிஷ்யா போர்டல் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இது ஓய்வூதிய ஒப்புதல் செயல்முறை மற்றும் கொடுப்பனவுகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்கள் எந்த தாமதத்தையும் சந்திக்க நேரிடாமல் அவர்களது தேவைகள் விரைவாக நிறைவடைகின்றன.

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு அதிக வசதிகள்

பவிஷ்ய போர்டலின் உதவியுடன், ஓய்வூதியதாரர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஓய்வூதிய நிலையை ஆன்லைனில் சரிபார்த்து, அனைத்து வித பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண முடியும்.

ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படக்கூடும் பிரச்சனைகள் அனைத்தும் சரியான நேரத்தில் சரி செய்யப்பட்டு, அவர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் சரியான நேரத்தில் ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்யும் அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா முயற்சிக்கு பவிஷ்ய போர்டல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், வெளிப்படையான, டிஜிட்டல் முறையில் தீர்வுகளை பெறுவதற்கும் இது ஒரு சிறந்த செயல்முறையாகும்.

மேலும் படிக்க | ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு... FD திட்டத்தின் வருவாயும் குறையும் - அடுத்து என்ன பண்ணலாம்?

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஊழியர்களுக்கு கொண்டாட்டம்... லெவல் 1-6 பே ஸ்கேல்கள் இணைக்கப்படுமா?

 

Trending News