நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது பட்ஜெட் உரையின் போது அறிவித்த புதிய வருமான வரி (New Income Tax Bill) மசோதா, வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 1961ம் ஆண்டின் 60 ஆண்டு பழமையான வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட உள்ள புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்களுக்கு மேல் இருக்கலாம் என்றும், முன்மொழியப்பட்ட சட்டம் வருமான வரிச் சட்டம், 2025 என்று அழைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சட்டம் 2026 ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 7ம் தேதி மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, மேலும் விவாதங்களுக்காக நாடாளுமன்றத்தின் நிதி நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும். புதிய வருமான வரி மசோதா 2025 அல்லது புதிய நேரடி வரி குறியீடு, இந்தியாவின் வரி முறையை சீர்திருத்துவதற்கான மிகபெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும். தற்போதுள்ள வரி கட்டமைப்பை மேலும் நெறிப்படுத்தப்படுத்தவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் நோக்கத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
புதிய வருமான வரி மசோதா கடந்து வந்த பாதை
1. கடந்த 2024 ஜூலை பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் 1961ம் ஆண்டின் வருமான வரிச் சட்டம் விரிவான மறுஆய்வு செய்யப்படும் என அறிவித்தார்.
2. மறுஆய்வை மேற்பார்வையிடவும், சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், புரிந்துகொள்ள எளிதாகவும் மாற்றவும் CBDT ஒரு உள் குழுவை அமைத்தது.
3. வருமான வரி குறித்த புகார்கள், வழக்குகளைக் குறைப்பதும், வரி செலுத்துவோருக்கு அதிக வரி உறுதிப்பாட்டை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
4. ஐடி சட்டத்தின் பல்வேறு அம்சங்களை மறுஆய்வு செய்ய 22 சிறப்பு துணைக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.
புதிய வருமான வரி மசோதா ஏற்படுத்தும் தாக்கங்கள்
1. கிட்டத்தட்ட 60 ஆண்டு பழமையான வருமான வரிச் சட்டம், 1961 என்ற 60 ஆண்டு கால பழைய சட்டத்தை மாற்றும் வகையில் புதிய வருமான வரி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட மசோதாவில் வரி செலுத்துவோருக்கு பயனளிக்கும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மொழியில் சுருக்கமாக எளிதில் புரியக் கூடிய வகையில் இருக்கும்.
2. வரி விதிகள் மற்றும் அதன் உட்பிரிவுகளை எளிமைப்படுத்தும் முயற்சியாக பிரிவுகளின் எண்ணிக்கையை 25-30 சதவீதம் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
3. 2025 புதிய வருமான வரி மசோதா, 536 பிரிவுகளைக் கொண்டுள்ளதாக இருக்கும், இது தற்போதைய வருமான வரிச் சட்டம், 1961 சட்டத்தில் உள்ள 298 பிரிவுகளை விட அதிகமாகும். தற்போதுள்ள சட்டத்தில் 14 அட்டவணைகள் உள்ளன. அவை புதிய சட்டத்தில் 16 ஆக அதிகரிக்கும். இருப்பினும், அத்தியாயங்களின் எண்ணிக்கை 23 ஆகவே இருக்கும்.
4. பக்கங்களின் எண்ணிக்கை கணிசமாக 622 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆறு தசாப்தங்களாக செய்யப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கிய தற்போதைய மிகப்பெரிய சட்டத்தின் கிட்டத்தட்ட பாதி அளவு ஆகும்.
5. வருமான வரிச் சட்டம், 1961 கொண்டு வரப்பட்டபோது, அது 880 பக்கங்களைக் கொண்டிருந்தது. முன்மொழியப்பட்ட புதிய சட்டம், வருமான வரிச் சட்டம், 1961-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி 'முந்தைய ஆண்டு' என்ற வார்த்தையை 'வரி ஆண்டு' என்று மாற்றுகிறது. மேலும், மதிப்பீட்டு ஆண்டு என்ற கருத்து நீக்கப்பட்டுள்ளது.
6. தற்போது, முந்தைய ஆண்டில் (2023-24) ஈட்டிய வருமானத்திற்கு, மதிப்பீட்டு ஆண்டில் (2024-25 ) வரி செலுத்தப்படுகிறது. இந்த முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு என்ற கருத்து நீக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்ட மசோதாவின் கீழ் வரி ஆண்டு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ