Foods For Bone Health: எலும்புகள் நம் உடலில் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றன. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க, உடலை வலுவாக வைத்திருக்க வேண்டுமானால், எலும்புகளை வலுவாக வைத்திருப்பது மிக அவசியமாகும். சுவர் இலாமல் சித்திரம் எழுத முடியாது என கூறுவதுண்டு. உடலை பொறுத்தவரை, எலும்புகள்தான் சுவர் போன்றவை. அவற்றின் ஆரோக்கியம் மிக அவசியம்.
நமது உடலின் முழு எடையும் எலும்புகள் தாங்குகின்றன. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க, கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தும் ஒரு அத்தியாவசிய கனிமமாகும். இது உடலின் சிறந்த செயல்பாட்டைப் பராமரிக்க உதவுகிறது. பொதுவாக பால், தயிர் மற்றும் சீஸ் ஆகியவற்றில் கால்சியம் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகின்றது.
எனினும், பால் பொருட்களை தவிர மற்ற சில உணவுகளிலும் ஏராளமான கால்சியம் இருக்கின்றது. இவற்றை உட்கொண்டு நாம் நமது எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். எலும்புகள் வலுவாக இருக்க, நாம் உட்கொள்ளக்கூடிய சில உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடல் போல் கால்சியத்தை கொண்டுள்ள டாப் 5 உணவுகள் இதோ:
எள்
எள் கால்சியத்தின் சிறந்த மூலமாக பார்க்கப்படுகின்றது. எள்ளில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆசிடெண்டுகள் நிறைந்துள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது தவிர, எள்ளில் கால்சியத்துடன் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளும் நிறைந்துள்ளன. இது எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. பாலக் கீரை ஒரு பச்சை இலை காய்கறியாக உள்ளது. இது கால்சியத்தின் சிறந்த மூலமாகும். இதில் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் கீரை சாப்பிடுவது எலும்புகளை வலுப்படுத்துவதற்கு நன்மை பயக்கும்.
சியா விதைகள்
சியா விதைகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளும் நிறைந்துள்ளன. ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி சியா விதைகளில் ஒரு கிளாஸுக்கு சமமான கால்சியம் இருப்பதாக நம்பப்படுகிறது. தினமும் ஒரு ஸ்பூன் சியா விதைகளை சாப்பிட்டால், உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படாது. சியா விதைகளை ஸ்மூத்திகள், கஞ்சி அல்லது சாலட்களில் சேர்த்து உண்ணலாம்.
டோஃபு
டோஃபு பால் அல்லாத கால்சியம் நிறைந்த சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. டோஃபு சோயாபீன்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது கால்சியத்தின் சிறந்த மூலமாகும். டோஃபுவில் கால்சியத்துடன் சேர்த்து அதிக அளவு புரதமும் உள்ளது. டோஃபுவை சரியான முறையில் உட்கொண்டால், எலும்புகளை வலுப்படுத்துவதோடு, தசை வளர்ச்சியையும் மேம்படுத்தலாம். பால் அல்லது தயிர் சாப்பிடாதவர்கள் டோஃபுவை உட்கொள்ளலாம். டோஃபுவில் இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
சோயா பால்
சோயா பால் கால்சியத்தின் நல்ல மூலமாகும். பால் பொருட்களைத் தவிர்க்க எண்ணும் நபர்கள் சோயா பாலை உட்கொள்ளலாம். சோயா பாலில் புரதம், வைட்டமின் பி12 மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. அவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உட்கவும். அவை எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க பெரிய அளவில் உதவுகின்றன.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை... தினமும் கட்டாயம் இஞ்சி சாப்பிடுங்க
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளின் நண்பன் நாவல் பழம்: இன்னும் பல நன்மைகளும் இருக்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ