2026இல் தவெகவுக்கு எவ்வளவு வாக்குகள் விழும்...? பிரசாந்த் கிஷோர் அறிக்கை!

TVK Vijay: தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக்கத்திற்கு தற்போது எவ்வளவு வாக்கு சதவீதம் இருக்கிறது என்பது குறித்து பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் (Prashant Kishor) அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Feb 11, 2025, 05:55 PM IST
  • நடிகர் விஜய் வீட்டில் நேற்று பிரசாந்த் கிஷோர் ஆலோசனை
  • இன்று ஆதவ் அர்ஜுனா வீட்டில் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை
  • பிரசாந்த் கிஷோர் அறிக்கை ஒன்றை சமர்பித்ததாக தகவல்
2026இல் தவெகவுக்கு எவ்வளவு வாக்குகள் விழும்...? பிரசாந்த் கிஷோர் அறிக்கை! title=

Tamilaga Vetri Kazhagam Vijay: தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தற்போது 15% முதல் 20% வாக்கு சதவீதம் இருப்பதாகவும், இந்த வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் செய்ய வேண்டிய செயற்பாடுகள் என்னென்ன என்பது குறித்தும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் (Prashant Kishor) அறிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அறிக்கையை அவர் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் சமர்பித்ததாக கூறப்படுகிறது.

TVK Vijay: அறிக்கையுடன் விஜய்யை சந்தித்த தவெக நிர்வாகிகள்

பிரசாந்த் கிஷோர் சமர்பித்த அறிக்கையுடன், தவெக நிர்வாகிகளான பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் அக்கட்சியின் தலைவர்  விஜய்யை இன்று சந்தித்ததாக கூறப்படுகிறது. விஜய் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால், அங்கு சென்று பிரசாந்த் கிஷோரின் அறிக்கையுடன் நிர்வாகிகள் அவரை சந்தித்ததாக கூறப்படுகிறது.

TVK Vijay: இன்று 2வது நாளாக ஆலோசனை

முன்னதாக, பிரசாந்த் கிஷோர் தவெக நிர்வாகிகளுடன் இரண்டாவது நாளாக தொடர்ந்து இன்றும் ஆலோசனை மேற்கொண்டார். பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இருந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், பிரசாந்த் கிஷோர் அங்கிருந்து புறப்பட்டார். மற்ற நிர்வாகிகள் விஜய்யை சந்திக்க சென்றுள்ளனர்.

TVK Vijay: நேற்று விஜய் வீட்டில் ஆலோசனை

இன்று ஆதவ் அர்ஜூனாவின் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம், நேற்று சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டில் நடைபெற்றது. அதில் விஜய்யுடன், பிரசாந்த் கிஷோர் சுமார் இரண்டரை மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay: 28 அணிகள் அமைப்பு

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டத்திட்டங்களின் மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 28 அணிகளின் நிர்வாகிகளுக்கான பதவிக்காலம்  2 ஆண்டுகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர் அணி, ஊடகப் பிரிவு, பிரச்சாரம் மற்றும் பேச்சாளர் அணி, உறுப்பினர் சேர்க்கை பிரிவு, காலநிலை ஆராய்ச்சி மற்றும் சூழலியல் அணி, வரலாற்று தரவு ஆராய்ச்சி மற்றும் உண்மைச் சரிபார்ப்பு அணி, திருநங்கைகள் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இளம் மகளிர் அணி, சிறார்கள் அணி, வணிகர்கள் அணி, மீனவர்கள் அணி, நெசவாளர்கள் அணி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் அணி, தொழிலாளர் அணி, தொழில் முனைவோர் அணி, வெளிநாடு வாழ் இந்தியர் அணி, மருத்துவர்கள் அணி, விவசாயிகள் அணி, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அணி, அனைத்திந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் உள்பட மொத்தம் 28 அணிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News