தனுஷ் ஒரு மகா கலைஞர்! மேடையிலேயே வாழ்த்திய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

பல்வேறு இளம் நடிகர்கள் நடித்துள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

Written by - RK Spark | Last Updated : Feb 12, 2025, 10:09 AM IST
  • 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழா.
  • சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
  • தனுஷ் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ளவில்லை.
தனுஷ் ஒரு மகா கலைஞர்! மேடையிலேயே வாழ்த்திய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்! title=

உலகங்கெங்கும் சினிமா ரசிகர்களாலும் அனைத்து வயதினராலும் கொண்டாடப்பட்டு வரும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான தனுஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர், R சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. தனுஷின் ஆஸ்தான தொழில்நுட்ப குழுவான G V பிரகாஷ் இசையமைக்க, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவில், பிரசன்னா G K படத்தொகுப்பில், ஜாக்கி கலை இயக்கத்தில், 'பாபா' பாஸ்கர் நடன இயக்கத்தில் பிப்ரவரி-21 அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.

மேலும் படிக்க | பராசக்தி படத்துலையும் சிவகார்த்திகேயனுக்கு சாவுதான்! காரணம் ‘இந்த’ ரியல் ஹீரோவின் கதை இது..

சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குனர்கள் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா,ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருடன் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் சரண்யா பொன்வண்ணன், பாடலாசிரியர் விவேக், கலைஇயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, "படம் சிறப்பாக வந்துள்ளது, படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். திரைத்துறையில் நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது; தனுஷ் அவர்கள் ஒரு பட்டாளத்தையே தயார் செய்து அனுப்பி வைத்துள்ளார். ஒரே சமயத்தில் இரு வேறு விதமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனராகவும், ஹாலிவுட் வரைக்கும் சென்ற தலைசிறந்த நடிகராகவும் விளங்குகிறார். படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்", என்றார்.

அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி பேசும்பொழுது,"தனுஷ் அவர்கள் எப்படி இவ்வளவு விரைவாக அடுத்தடுத்த படங்களில் இயக்கம் மற்றும் நடிப்பு என்று பரபரப்பாக இருப்பதனால் ஒரு மகா கலைஞனாக விளங்குகிறார். படத்திற்கு GV பிரகாஷ் சிறப்பாக இசையமைத்துள்ளார். படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்", என வாழ்த்தினார். விக்னேஷ் ராஜா பேசும்போது,"இளம் திறமையாளர்களுக்கு எப்பொழுதும் ஆதரவளிப்பவர் தனுஷ் அவர்கள் இந்த படக் குழுவும் அப்படியே உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. படம் வெற்றியடைய வாழ்த்துக்கிறேன்" என பேசினார்.

தமிழரசன் பச்சமுத்து பேசும்பொழுது,"தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் 'லப்பர் பந்து' படத்தை பார்த்துவிட்டு கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியடையும் என்று வாழ்த்தினார். அதேபோல 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பேசப்படக்கூடிய மற்றும் ஜாலியான திரைப்படமாகவும் இருக்கும் என கூறினார். அவர் கூறியபடி அனைத்தும் நடக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்றார்.  அருண் விஜய் வாழ்த்தி பேசும் பொழுது,"சகோதரர் தனுஷ் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் பன்முகத் திறமையாளர். இளைஞர்களை கவரும் விதத்தில், GV பிரகாஷ் சிறப்பான இசையை தந்துள்ளார். படத்தில் நிறைய இளம் திறமையாளர்களுக்கு தனுஷ் வாய்ப்பளித்துள்ளார் அவர்களையும் வாழ்த்துகிறேன்", என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசும்பொழுது,"தனுஷ் அவர்கள் இளமையான கதையம்சம் கொண்ட திரைப்படம் என கூறியதால், அதற்கேற்றவாறு இளமை ததும்பும் மாற்று இசையை இப்படத்திற்காக உருவாக்கினோம்.அவருடன் இணைந்து பயணிப்பது சிறப்பான அனுபவம். அவருடைய இயக்கத்தில் முதன்முறையாக இசையமைத்தது புதிய அனுபவமாக இருந்தது. அதே போல பாடலாசிரியர் விவேக், கலை இயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி மற்றும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடித்த பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர்  தாங்கள் பணியாற்றிய அனுபவத்தையும், இந்த மிகப்பெரிய வாய்ப்பு அளித்த தனுஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க | அஜித்தின் பாராட்டால் அசந்து போன சிவகார்த்திகேயன்! என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News