Tamil Nadu Cabinet Meeting 2025: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான 18ஆவது அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (பிப். 10) காலையில் நடைபெற்றது. 2025-26 நிதியண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை முன்னிட்டு இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்றைக்கு ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப் பெரிய புரட்சியை செய்திருக்கிறார்.
அமைச்சரவை கூட்டம்: ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு
அந்த புரட்சி என்னவென்று சொன்னால், சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்டங்களில், பெல்ட் ஏரியா பகுதிகளில் இருக்கக்கூடிய 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெறமுடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யமுடியாமல் இருப்பதும் நம்முடைய முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றது.
மேலும் படிக்க | பிரபாகரனே ஏற்றுக்கொண்டாலும்... நான் பெரியாரை எதிர்ப்பேன் - சீமான் மீண்டும் அதிரடி
இதன் விளைவாக இன்றைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னையை சுற்றியிருக்கக்கூடிய அந்த நான்கு மாவட்டங்களின் பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளார்.
அமைச்சரவை கூட்டம்: 29,187 பேருக்கு பட்டா
முடிவு செய்த நேரத்தில், சென்னையில் மட்டும் 29 ஆயிரத்து 187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த பட்டா வழங்குவதற்கான பணிகளை ஆறு மாத காலத்திற்குள் முடித்துக் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962ஆம் ஆண்டில் வந்தது. 1962ஆம் ஆண்டில் இருந்து 2025ஆம் ஆண்டு வரை அதன் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.
இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மிகத் தெளிவாக ஒரு முடிவெடுத்து ஆறு மாதத்திற்குள் பட்டா வழங்கவேண்டும் என்று ஆணையிட்டது மட்டுமல்லாமல், மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்தப் பணிகளை துவங்கி ஆறு மாத காலத்திற்குள்ளாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அந்தப் பணிகளை நாங்கள் செய்யவிருக்கிறோம். சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்ட மக்களுக்கும், மிகப் பெரிய வரப்பிரசாதமாக இது அமைய இருக்கிறது" என்றார்.
அமைச்சரவை கூட்டம்: தென் மாவட்ட மக்களுக்கும் நற்செய்தி
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்,"மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளில் இதே போல பிரச்சனை இருக்கிறது. அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கெல்லாம் சேர்ந்து மொத்தம் 57 ஆயிரத்து 84 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற அந்த உத்தரவையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.
ஏறத்தாழ 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குகின்ற அந்த தீர்மானத்தை இன்றைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஆறு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 86 ஆயிரம் பேர் போக இன்னும் விடுபட்டிருந்து மனுக்கள் வரும் என்று சொன்னால், அதையும் பரிசீலனை செய்யுங்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 1962ஆம் ஆண்டில் இருந்து 2025ஆம் ஆண்டு வரை உள்ள பிரச்சனையை இன்றைக்கு முடிவு செய்திருக்கிறார்.
அமைச்சரவை கூட்டம்: இதுவரை வழங்கப்பட்ட பட்டாக்கள்
இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி வந்த பிறகு, 10,26,000 பேருக்கு நாங்கள் பட்டா வழங்கி இருக்கிறோம். முதலமைச்சர் இன்னும் கொஞ்சம் விரைவுப்படுத்தி, வரும் ஆறு மாதத்திற்குள்ளாக 6,29,000 பேருக்கு பட்டா வழங்குகின்ற அந்த பணியையும் செய்து கொண்டிருக்கிறோம்.
மேலும் படிக்க | விஜய் மீது முட்டை அடிப்போம்! ரஜினி ரசிகர்கள் ஆவேசம்! இணையத்தில் வலுக்கும் சண்டை!
தொடர்ந்து பொதுமக்கள் பொதுவாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் மனிதனுக்கு குடியிருப்பதற்கு இடமோ, வீடோ இல்லாமல் இருக்கக்கூடாத அந்த உணர்வோடு ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பெல்ட் ஏரியாவிற்கு எடுக்கப்பட்ட முடிவு மிகப் பெரிய அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய முடிவாக இருக்கும்" என குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரவை கூட்டம்: 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு
இதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினும் இன்று அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில்,"ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு" என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.
ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு!
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர்,
மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர்… pic.twitter.com/a8yo2kzRpM
— M.K.Stalin (@mkstalin) February 10, 2025
மேலும், அந்த பதிவில்,"சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் 'பெல்ட் ஏரியாக்களில்' ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29 ஆயிரத்து 187 பேர் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57 ஆயிரத்து 84 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம்!
6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்க உள்ளோம். உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12 லட்சத்து 29 ஆயிரத்து 372 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | வங்கி நகை கடன் தள்ளுபடி! தமிழக அமைச்சர் பெரியகருப்பன் சொன்ன முக்கிய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ