Kanchana 4 Two Heroines : தமிழில் பேய் பட சீரிஸ் படங்கள் பெரிதாக வெளிவந்தது கிடையாது. ஆனால் அதற்கு அடித்தளமாக அமைந்தவர் ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வந்த இவர், அதன் பின்னர் நடிகராகவும் இயக்குனராகவும் மாறினார். இவர் எடுக்கவிருக்கும் காஞ்சனா 4 படம் குறித்து தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது
காஞ்சனா 4:
ராகவா லாரன்ஸ் எடுத்த முனி திரைப்படம் பெரிதளவில் வெற்றி அடைய, அதன் பாகம் ரெண்டாக காஞ்சனா படத்தை ஆரம்பித்தார். இந்த படமும் ஹிட் அடித்தவுடன் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை இயக்கி நடித்தார். இவரது இந்த படங்களில் ஹைலைட்டே, பேய் படம் பார்க்க பிடிக்காதவர்களையும் பார்க்க வைப்பதுதான். காரணம், ஹாரர் படத்தில் அதிக அளவு காமெடியை நுழைத்து எடுக்க ஆரம்பித்தது இவர்தான். இது வொர்க் அவுட் ஆக, தொடர்ந்து இதே டெம்ப்ளேட்டில் படங்களை இயக்கி வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டு காஞ்சனா 4 படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. வழக்கம்போல இந்த படத்தையும் ராகவா லாரன்ஸ் தான் எழுதி, இயக்கி நடிக்கிறார்.
இரண்டு கதாநாயகிகள்..
காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் வரை ராகவா லாரன்ஸுக்கு ஒரு கதாநாயகி மட்டுமே இருந்தார். ஆனால் கடைசியாக வெளியான காஞ்சனா 3 படத்தில் வேதிகா, ஓவியா, நிக்கி டாம்போலி என மூன்று கதாநாயகிகள் இருந்தனர். தற்போது அதையே அவர் நான்காம் பாகத்திலும் கடைபிடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு இரண்டு கதாநாயகிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டே:
முகமூடி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்தி ஹீரோயினாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களால் தமிழ் பெண்ணாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நாயகியாக இருக்கிறார். 202வில் விஜய் உடன் இவர் இணைந்து நடித்த பீஸ்ட் படம் வெளியானது. படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் பூஜா ஹிட்டே ரசிகர்களின் மனதில் பாசிட்டிவாக அமர்ந்து விட்டார். இது அவருக்கு தளபதி 69 படமான ஜன நாயகன் படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை தேடி தந்தது. சூர்யாவுடன் இவர் இணைந்து நடத்தி இருக்கும் ரெட்ரோ படமும் விரைவில் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு பூஜா ரவுண்ட் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான், தற்போது இவர் காஞ்சனா 4 படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்னொரு நாயகி யார்?
பூஜா ஹெக்டே போலவே காஞ்சனா 4 படத்தில் இன்னொரு கதாநாயகியும் கமிட் ஆகியிருக்கிறார். ஆனால் அவர் இதுவரை எந்த தமிழ் படங்களிலும் நடித்ததில்லை. அந்த நடிகை இந்தி திரையுலகை சேர்ந்தவர். அவரது பெயர் டோரா ஃபட்டேஹி. பாலிவுட்ல பல முன்னணி பிரபலங்களுடன் இவர் சேர்ந்து நடித்திருக்கிறார். இவரை தமிழ் படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | காஞ்சனாவின் அடுத்த பாகம் எப்போது? ராகவா லாரன்ஸ் கொடுத்த அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ