கல்யாணத்திற்கு சம்மதம் சொன்ன அஞ்சலி..கண்ணீரில் கவின், துளசிக்கு காத்திருந்த அதிர்ச்சி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

சிவராமன், ரகுராமன் மற்றும் கேசவன் என ஆளுக்கு ஒரு பக்கமாக மகேஷ் குறித்து விசாரித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Keerthana Devi | Last Updated : Feb 10, 2025, 03:16 PM IST
    • ஜீ தமிழில் புதிதாக தொடங்கியிருக்கும் சீரியல்..
    • 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது..
    • இன்றைய எபிசோட் அப்டேட்..
கல்யாணத்திற்கு சம்மதம் சொன்ன அஞ்சலி..கண்ணீரில் கவின், துளசிக்கு காத்திருந்த அதிர்ச்சி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்  title=

Episode Update Of Serial Getti Melam :  தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகா தொடர் கெட்டிமேளம்.

 

 

kettimelam

நேற்றைய எபிசோட்: ஜீ தமிழில் புதிதாக தொடங்கியிருக்கும் கெட்டி மேளம் சீரியலில், நேற்று என்ன நடந்தது தெரியுமா? சிவராமன், ரகுராமன் மற்றும் கேசவன் என ஆளுக்கு ஒரு பக்கமாக மகேஷ் குறித்து விசாரித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. இந்தநிலையில் பலவித திருப்பங்கள் நடக்கிறது. இதையடுத்து, இன்று என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

இன்றைய எபிசோட் அப்டேட்: அதாவது, ரகுராமன்  மற்றும் கேசவன் என இருவரும் வீட்டிற்கு வந்து மகேஷை பற்றி எல்லாரும் நல்லவிதமாக தான் சொல்றாங்க என்று சொல்ல லட்சுமி நம்ப மறுக்கிறாள். 

அதனை தொடர்ந்து சிவராமனும் மகேஷ் நல்ல பையன் தான் என்று சொல்லி இனிமே அஞ்சலி தான் முடிவு செய்யணும் என்று சொல்கிறாள். அஞ்சலி படிப்பு இருக்கே என்று கவலைப்பட துளசி நல்ல வாழ்க்கையை மிஸ் பண்ணிடாத.. உன் வாழ்க்கையை நீ வாழு என அட்வைஸ் செய்கிறாள்.

இதை தொடர்ந்து அடுத்த நாள் காலையில் துளசி ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்து அண்ணா நகர் போக வேண்டும் என்று சொல்ல வெற்றியும் அதே ஆட்டோ டிரைவரிடம் அண்ணா நகர் போக வேண்டும் என்று சொல்கிறான். துளசி வெற்றியின் முகத்தை பார்த்து விட்டு இவன் கூட எல்லாம் போக முடியாது என நகர்ந்து செல்கிறாள். 

வெற்றி நீங்களும் அண்ணா நகர் தான் போறீங்க, நானும் அண்ணா நகர் தான் போறேன்.. எதுக்குங்க தனி தனியா போகணும்? ஷேர் பண்ணி போய்டலாம். நீங்க பின்னாடி உட்கார்ந்துக்கோங்க நான் முன்னாடி அண்ணன் பக்கத்துல உட்கார்ந்துக்கிறேன் என்று சொல்கிறான். 

போகும் போது துளசியை வர்ணித்தபடி வெற்றி பேச துளசி கடுப்பாக என் அத்தை பொண்ணு கமலியை பற்றி பேசியதாக சமாளிக்கிறான். அடுத்து ஜெகன் மற்றும் மோனிகா ஆகியோர் கம்பெனியில் புதியதாக பொறுப்பேற்று இருப்பதால் எல்லாருக்கும் சிறிய பார்ட்டி கொடுக்கின்றனர். 

kettimelam

இந்த பார்ட்டிக்கு வரும் துளசி மறைந்திருந்து தியாவை பார்க்க முயற்சி செய்கிறாள். ஜெகனின் அம்மா சாப்பிட்டு கொண்டிருக்க தியா பசியில் அவளையே பார்த்தபடி இருக்க என்ன கண்ணு வைக்கிறியா என்று திட்டி அனுப்புகிறாள். 

பசி தாங்காத தியா எச்ச இலையில் இருப்பதை எடுத்து சாப்பிட ஜெகன் என்ன எங்களை இன்செல் பண்றியா என்று அவளை நீச்சல் குளத்தில் தள்ளி விட துளசி பதறி போய் அவளை காப்பாற்றுகிறாள். தியாவை என் கூடவே கூட்டிட்டு போறேன்.. நீங்க அவளை கொல்ல பார்க்கறீங்க என்று சொல்ல மோனிகா வெளியே வருகிறாள். 

ஜெகனும் அவன் அம்மாவும் குழந்தை தெரியாமல் நீச்சல் குளத்தில் விழுந்து விட்டதாக சொல்லி நம்ப வைக்க மோனிகா துளசியை திட்டி குழந்தையை பறித்து கொள்கிறாள். அடுத்ததாக காலேஜில் கவின் இன்னைக்கு எப்படியாவது அஞ்சலியிடம் காதலை சொல்லிடனும் என முடிவோடு காத்திருக்க அவனது நண்பர்கள் கலாய்த்தபடி இருக்கின்றனர். 

இந்த சமயத்தில் அஞ்சலி காலேஜ் வர கவின் முட்டி போட்டு காதலை ப்ரொபோஸ் செய்ய அஞ்சலி ஒன்னும் புரியாமல் நிற்கிறாள். கடைசியில் என்ன உன் லவ்வர் கிட்ட ப்ரொபோஸ் பண்ண என்னை வச்சி பிராக்டிஸ் பண்றியா என்று கலாய்த்து விடுகிறாள். 

பிறகு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று சொல்லி மகேஷ் பெண் கேட்டு வந்த விஷயத்தையும் குடும்பத்தார் அவனை திருமணம் செய்து கொள்ள சொல்லும் விஷயத்தையும் சொல்கிறாள். கவின் கண் கலங்கி நிற்கிறான். நீ மகேஷையே கல்யாணம் பணிக்கோ என்று சொல்ல மழை கொட்ட தொடங்க மழையில் கண்ணீருடன் நிற்கிறான். 

kettimelam

வீட்டிற்கு கிளம்பி வரும் அஞ்சலி அப்பாவிடம் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல சிவராமன் மகேஷ்க்கு போன் போட்டு அஞ்சலி சம்மதம் சொன்ன விஷயத்தை சொல்ல அதை கேட்டு ஆனந்தம் கொள்கிறான். அடுத்தகட்ட வேலைகளை பார்க்கலாம் என்று சிவராமன் சொல்லி முடிப்பதற்குள் மகேஷ் நாளைக்கே நல்ல நாள் தான் என்று சொல்ல சிவராமன் ஷாக் ஆகிறான். 

மகேஷ் ஏன் நாளைக்கே வேண்டாமா என்று கேட்க சிவராமன் உங்க விருப்பம் மாப்பிள்ளை நாளைக்கே நிச்சயத்தை வச்சிக்கலாம் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க| சாணக்கிய நீதி: பாம்பைவிட ஆபத்தானவர்கள்..இவர்களுடன் நட்புவைக்கும் முன் யோசிக்க வேண்டும்!

மேலும் படிக்க| நடிகை ஸ்ரேயா சரண் அழகின் ரகசியம்..இளமையாக இருக்க இதுதான் காரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News