70 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லி யூனியன் பிரதேச சட்ட பேரவை தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தேர்தலில் நாடெல்லி சட்டமன்றத் தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். அவர் மட்டும் இன்றி அவரது கட்சியும் தோல்வியை சந்தித்துள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில், பாரதிய ஜனதா கட்சி 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக வலிமையான வேட்பாளர்களை நிலைநிறுத்தியது. அதன் காரணமாக தற்போது டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
மேலும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜக வேட்பாளர்! யார் இந்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா?
அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி
டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் போட்டியை அளிக்கும் நோக்கில் பர்வேஷ் சர்மாவை வேட்பாளராக நியமித்தது பாஜக. இது அந்த பகுதியில் ஆச்சரியமூட்டும் நடவடிக்கையாக காணப்பட்டது. பர்வேஷ் வர்மா அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை சாஹிப் சிங் வர்மா பாஜகவின் முன்னாள் தலைவர் மற்றும் டெல்லி முதல்வராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். கூடுதலா, பர்வேஷ் வர்மாவின் மாமா ஆசாத் சிங், வடக்கு தில்லி மாநகராட்சியின் மேயராக பதவி வகித்து, 2013ல் நடைபெற்ற தேர்தலில் முண்ட்கா தொகுதியில் போட்டியிட்டார். 1977ல் பிறந்த பர்வேஷ் வர்மா ஆர்.கே.புரத்தில் உள்ள தில்லி அரசுப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்று மால் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பிரபல ஜாட் தலைவராக இருக்கும் பர்வேஷ் வர்மா இரண்டு முறை பாராளுமன்றத்திற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
#WATCH | Daughters of BJP candidate from the New Delhi assembly constituency Parvesh Verma, Trisha and Sanidhi say, "We thank the people of New Delhi for their support. The people of Delhi will never make the mistake of giving a second chance to a person who runs govt by telling… pic.twitter.com/jOze2sKzkx
— ANI (@ANI) February 8, 2025
பர்வேஷ் வர்மாவின் சொத்து மதிப்பு
வேட்புமனு தாக்கல் செய்யும் போது பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா தனது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.89 கோடி என தெரிவித்துள்ளார். அவரது மனைவி ஸ்வாதி சிங்கின் சொத்து மதிப்பு ரூ.24.4 கோடி என்றும், தன்னிடம் ரூ. 2.2 லட்சம் ரொக்கமும், தனது மனைவியிடம் ரூ.50,000 ரொக்கமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பங்குகள் மற்றும் பத்திரங்களில் மொத்தம் ரூ.52.75 கோடி முதலீடு செய்துள்ளார். தனது மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்ட பாலிசிகளில் கூடுதலாக ரூ. 5.5 லட்சத்துடன் ரூ.17 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு பாலிசிகளை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். டொயோட்டா ஃபார்ச்சூனர், இன்னோவா, மஹிந்திரா எக்ஸ்யூவி உள்ளிட்ட பல சொகுசு வாகனங்களையும், ரூ.8.25 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தையும் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பாஜக பெரும்பான்மை
நேற்று பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. தற்போது பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி மேல் இருந்த குற்றசாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்த பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தோல்வி ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
மேலும் படிங்க: டெல்லியில் மலரும் தாமரை.. ஆம் ஆத்மி கோட்டை விட்டது எங்கே? ஓர் அலசல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ