Shani Ast: பிப்ரவரி 28 ஆம் தேதி சனி பகவான் அஸ்தமனம் ஆகிறார். இதனால் எந்த ராசிகளின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்? யாருக்கு அதிக லாபம் கிடைக்கும்?
Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர நட்சத்திர பெயர்ச்சி, அஸ்தமனம், உதயம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என கிரகங்கள் பல மாற்றங்களை மேற்கொள்கின்றன. சனி பெயர்ச்சி மார்ச் மாதம் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி சனி பகவான் அஸ்தமனமாக உள்ளார்
ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். அவரது வேகம் மெதுவாக இருக்கும். சனி ஒரு ராசியில் சுமார் 2.5 ஆண்டுகள் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது மாற்றம் ராசிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சனி பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி பகவான் மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சிக்கு முன்னதாக பிப்ரவரி 28ஆம் தேதி அஸ்தமனம் ஆகிறார். இது குறிப்பிடத்தக்க ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி பெயர்ச்சிக்கு முன் நடக்கவுள்ள சனி அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இதனால் சில ராசிகளுக்கு அதிக ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். இவர்களது பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு, இந்த நேரம் லாபம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் முயற்சிகளின் பலனை அறுவடை செய்யும் காலம் இது. ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரத்தில் சிறப்பு நன்மைகள் கிடைக்கக்கூடும். இது உங்கள் வாழ்க்கையில் ஆடம்பரத்தையும் செழிப்பையும் கொண்டுவரும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப செலவு செய்ய முடியும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சிக்கு முன் வரும் சனி அஸ்தமனத்தால் அனுகூலமான பலன்களை பெறுவார்கள். இந்த நேரத்தில் அவர்களது முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் உறவுகளுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் நேர்மறையான மாற்றங்களையும் நிதி ஆதாயங்களையும் அனுபவிப்பீர்கள்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் புதிய உச்சங்களை தொட வாய்ப்புள்ளது. சனி பெயர்ச்சிக்கு முன் நடக்கும் சனி அஸ்தமனம் நல்ல பலன்களை அளிக்கும். பெரிய லாபம் கைகூடும். வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. தனுசு ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள். செல்வம், சொத்து மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். இது உங்களை வசதியான மற்றும் வளமான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும். உங்கள் நீண்ட கால ஆசைகள் இப்போது நிறைவேறும்.
மீனம்: சனி அஸ்தமனம் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். மீன ராசிக்காரர்களுக்கு, இது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் திருப்திக்கான நேரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை மிக நன்றாக இருக்கும்.
சனி பகவானின் அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யலாம். இது தவிர, சனி சாலிசா, அனுமான் சாலிசா ஆகியவற்றை சொல்வதும் நல்லது.
சனி பகவான் எந்த நிலையில் இருந்தாலும், சில வழிகளில் அவரது பரிபூரண அருளை பெற முடியும். சனிக்கிழமைகளில் சனி பகவானின் கோவிலுக்கு சென்று எள் தீபம் ஏற்றுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.