CIBIL Score சரியில்லாததால் நின்று போன திருமணம்! இது அவ்வளவு முக்கியமா? வைரல் செய்தி..

Brides Family Cancels Wedding Over Grooms CIBIL Score : சிபில் ஸ்கோர் சரியில்லை என ஒரு கல்யாணம் நிக்குமா? நின்றுச்சே! இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Feb 9, 2025, 04:21 PM IST
  • சிபில் ஸ்கோரால் வந்த பிரச்சனை..
  • நின்று போன திருமணம்..
  • நடந்தது என்ன? முழு விவரம்!
CIBIL Score சரியில்லாததால் நின்று போன திருமணம்! இது அவ்வளவு முக்கியமா? வைரல் செய்தி.. title=

 Brides Family Cancels Wedding Over Grooms CIBIL Score : சினிமா படங்களை பார்க்கும் போதெல்லாம், ஹீரோயினுக்கு வில்லன் தாலி கட்டும் சமயத்தில் ஹீரோ வந்து “நிறுத்துங்க” எனக்கு கத்தி அந்த திருமணத்தை நிறுத்துவார். இதுபோன்ற சம்பவங்கள் நிஜத்தில் கூட பல நடந்து இருக்கின்றன. ஆனால் அப்படி என்று போகும் திருமணம் எல்லாவற்றிற்கும் பின்னாலும் ஒரு கதை இருக்கும். அந்தக் கதை பெரும்பாலான சமயங்களில் காதல் கதையாகவோ, அல்லது சம்பந்தப்பட்ட இருவரில் யாரேனும் ஒருவர் இன்னொருவரை ஏமாற்றும் கதையாகவோ இருக்கும். ஆனால் இங்கு ஒரு திருமணம் சிபில் ஸ்கோர் சரியில்லாததால் நின்றிருக்கிறது.

சிபில் ஸ்கோரால் நின்று போன திருமணம்..!

மகாராஷ்டிராவின் மூர்டிசாபூர் என்ற இடத்தில் ஒரு திருமண விசேஷம் நடைபெற இருந்தது. இந்தத் திருமண தேதியை ஃபிக்ஸ் செய்வதற்காக இருவீட்டாரும் ஒரு நாள் சந்தித்துக் கொண்டனர். தற்போது மணப்பெண்ணின் உறவினர் ஒருவர் ஒரு எதிர்பாராத கோரிக்கையை அந்த மாப்பிள்ளை வீட்டாரிடம் வைத்திருக்கிறார். அது என்னவென்றால், மாப்பிள்ளையின் சிபில் ஸ்கோர் என்ன என்பதை பார்க்க வேண்டும் என்றுதான். இதைப் பார்த்தவுடன் மணமகன் பல்வேறு வங்கிகளில் இருந்து கடன் வாங்கி இருப்பதையும், அதை சரியாக கட்ட முடியாத காரணத்தால் அவருக்கு கம்மியான சிபில் கிரெடிட் ரேட்டிங் கிடைத்திருப்பதையும் தெரிந்து கொண்டார் அந்த உறவினர். இதனால் நிதி ரீதியாக இன்னும் நிலையாக இல்லாத அந்த மணமகன் தங்கள் வீட்டு பெண்ணை எப்படி பார்த்துக் கொள்வார் என்கிற காரணத்தால் இந்த திருமணத்தையே நிறுத்தி இருக்கின்றனர்.

சிபில் ஸ்கோர் என்றால் என்ன? 

நாம் வங்கிகளில் கடன் வாங்கி, அதை சரியாக திரும்ப செலுத்தவில்லை என்றால் CIBIL score என்பது அடிவாங்கும். இதனை நாம் கிரெடிட் கார்டை கடன் செலுத்த எப்படி உபயோகித்திருக்கிறோம், கிரெடிட் கார்டில் எவ்வளவு கடன் இருக்கிறது, எத்தனை நாட்கள் கிரெடிட் இருக்கிறது, இத்தனை கடன்களுக்கு விண்ணப்பித்திருக்கிறோம், நம் கிரெடிற்கு எவ்வளவு வயதாகிறது போன்ற விஷயங்களை வைத்து கணக்கு பார்ப்பர். மூன்று டிஜிட்டல் வரும் இந்த ரேட்டிங் 300-900 வரை இருக்கும். இதனை TransUnion வெளியிடும். இதை வைத்து ஒருவரின் நிலை தெரிந்து கொள்ளலாம். இதை பார்த்து தான் அந்த மணமகனின் உறவினர் திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்.

கிரெடிட் ஸ்கோர் ஒருவருக்கு 750 க்கு மேல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவருக்கு வங்கி கடன்கள், குறைவான வட்டி விகிதத்தில் எளிதில் கிடைக்கும். இந்த ஸ்கோர் அதைவிட குறைவாக இருந்தால் அனைத்து வங்கிகளும் கடனுக்கு விண்ணப்பிக்கையில் அதை நிராகரித்து விடும். அப்படியே கடன் கொடுத்தாலும் அதற்கு அதிக சதவிகித வட்டியை விதிக்கும். அந்த மணமகன் தனது சிபில் ஸ்கோரை சரியாக வைத்திருந்தால் அவருக்கு இந்நேரம் திருமணமே முடிந்திருக்கும்.

மேலும் படிக்க | மருமகளை திருமணம் செய்த மாமனார்! விரக்தியில் துறவியான மகன்..வைரல் செய்தி..

மேலும் படிக்க | வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்து கொண்ட ஆசிரியை! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News