சுக்கிரன் வக்ர நிலை: இந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்குது - மொத்தமும் மாறும்!

Shukran Vakri 2025: சுக்கிரன் பகவான் வரும் மார்ச் 2ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலைக்கு மாறுவதால், இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல காலம் பிறக்கப்போகுது.

சுக்கிரன் (Venus) அருள் இருந்தால் உங்களின் அதிர்ஷ்டம் உச்சிக்குப் போகும். பணமும், வசதிகளும் உங்களை தேடி வரும். இதனால், வாழ்க்கையே நேர்மறையாக மொத்தமாக மாறும்.

1 /8

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்களின் நிலைகளை மாற்றும். அதே நேரத்தில் ராசிகளை மாற்றும்.

2 /8

அந்த வகையில், சுக்கிரன் பகவான் வரும் மார்ச் 2ஆம் தேதி அன்று வக்ர நிலைக்கு மாற உள்ளார். சுக்கிரன் பகவானின் அருள் இருந்தால் உங்கள் வாழ்க்கை செல்வச் செழிப்போடு இருக்கும்.

3 /8

மீனத்தில் சுக்கிர பகவான் இருப்பதால், அந்த ராசியிலேயே தான் நிலையை மாற்றிக்கொள்கிறார். இது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கம் செலுத்தியிருக்கும்.

4 /8

அந்த வகையில், சுக்கிர பகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு வர உள்ள காலகட்டம் சிறப்பாக இருக்கும், நல்ல நாள்கள் காத்திருக்கின்றன. அவை என்னென்ன ராசிகள் என்பதை இங்கு காணலாம்.

5 /8

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்கள் காத்திருக்கின்றன. அதிர்ஷ்ட காற்று வீசும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு பணமும் கொட்டும். பயணம் மேற்கொள்வதால் நன்மை உண்டாகும். சினிமா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். காதல் வாழ்க்கையும் முன்னேறும்.

6 /8

தனுசு: சுக்கிரன் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். சொகுசான வாழ்க்கை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நல்ல வேலை உங்களை தேடி வரும். பதவி உயர்வும் கிடைக்கும். வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதாரம் பலமாகும். காதல் வாழ்வும் சிறப்பாக இருக்கும். மனைவியிடம் இருந்து முழு ஆதரவும் கிடைக்கும். சொத்து அல்லது வாகனங்களை வாங்குவீர்கள்.

7 /8

மீனம்: இந்த காலகட்டத்தில் உங்கள் ஆளும் மிகச்சிறப்பானதாக மாறும். காதல் வாழ்விலும் பெரிய மாற்றங்கள் வரும். தொழிலும், வேலையிலும் நேர்மறையான மாற்றங்கள் நடக்கும். மன அமைதி இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்துசேரும். குடும்ப பிரச்னைகள் தீரும், மனைவியுடனான பிரச்னைகளும் முடிவுக்கு வரும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கணிப்புகள் சார்ந்து எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.