8th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. 8வது ஊதியக்குழு குறித்த ஒரு முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: சமீபத்தில் மத்திய அரசு 8வது சம்பளக் குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான முறையான செயல்முறையை அரசாங்கம் விரைவில் தொடங்க உள்ளது. ஊதியக் குழு ஏப்ரல் 2025 முதல் தனது பணிகளைத் தொடங்கும் என கூறப்படுகின்றது. சாத்தியமான ஊதிய உயர்வு என்ன? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8வது உதியக்குழு தொடர்பான விவாதங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக இதன் உருவாக்கம் குறித்து ஊகங்கள் இருந்தன, இப்போது இது குறித்து ஒரு பெரிய புதுப்பிப்பு வெளிவந்துள்ளது.
8வது சம்பளக் குழுவிற்கான முறையான செயல்முறையை அரசாங்கம் விரைவில் தொடங்க உள்ளது. ஊதியக் குழு ஏப்ரல் 2025 முதல் தனது பணியைத் தொடங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு தொடர்பான புதிய ஊதிய அமைப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்தது. ஆகையால், புதிய ஊதியக்குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. அரசாங்கம் அதற்கான பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
மேலும் 8வது சம்பளக் குழுவின் விதிமுறைகள் (TOR) மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, ஆணையம் ஏப்ரல் 2025 முதல் அதன் பணிகளைத் தொடங்கலாம் என்று நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்குப் பிறகு கமிஷன் சம்பள உயர்வு சூத்திரத்தையும் ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் பரிசீலிக்கும். ஆனால், பரிந்துரைகளை செயல்படுத்த சுமார் 18 மாதங்கள் ஆகும் என்பதால், அதை செயல்படுத்த சிறிது நேரம் ஆகலாம்.
குறிப்பு விதிமுறைகள் (ToR) அங்கீகரிக்கப்பட்டவுடன், ஆணையத்தின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு தரவு சேகரிப்பு தொடங்கும். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை ஆணையம் சமர்ப்பிக்கலாம். இந்த ஆணையத்திற்கு அரசாங்கம் 2026 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டைச் செய்யலாம். பின்னர் அரசாங்கம் அதை 2026 நிதியாண்டில் செயல்படுத்தலாம் என கூறப்படுகின்றது.
ஊதிய உயர்வு8வது சம்பளக் குழுவில் உள்ள மிகப்பெரிய அம்சம் ஃபிட்மென்ட் ஃபாக்டராகும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறைந்தபட்சமமாக 1.90 ஆக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் நேரடியாக 90% அதிகரிக்கலாம்.
ஊதிய உயர்வு கணக்கீடு: ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.90 ஆக நிரணயிக்கப்பட்டால், தற்போது ரூ.18,000 ஆக உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.34,200 ஆக அதிகரிக்கும். அடிப்படை சம்பளமாக ரூ.56,100 பெறுபவர்கள் இனி ரூ.1,06,590 பெறுவார்கள். அதேபோல் ரூ.1,50,000 அடிப்படை ஊதியம் பெறும் நபர்கள் ரூ.2,85,000 பெறுவார்கள்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.50 ஆக நிர்ணயிக்கப்பட்டால், ரூ.18,000 ஆக உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.45,000 ஆக அதிகரிக்கலாம். அதேபோல் ரூ.1,50,000 அடிப்படை ஊதியம் பெறும் நபர்கள் ரூ.3.75,000 பெறுவார்கள்.
ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) எவ்வளவு பலன் கிடைக்கும்? தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆகவும் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகவும் உள்ளதும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.90 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய ஓய்வூதியம் ரூ.17,100 முதல் ரூ.2,37,500 வரை எட்டக்கூடும்.
8வது சம்பளக் குழு அமலுக்கு வந்தால், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வையும் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய அதிகரிப்பின் பலனையும் பெறுவார்கள். மாநில அரசுகளும் வழக்கமாக மத்திய சம்பளக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்கின்றன. ஆகையால் இது மாநில ஊழியர்களுக்கும் பயனளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் 8வது ஊதியக்குழுவின் மூலம் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.