ரச்சின் ரவீந்திரா விலகிவிட்டால்... சிஎஸ்கே இந்த 3 பேரில் ஒருவரை நம்பி எடுக்கலாம்!

IPL 2025 CSK: காயத்தால் அவதிப்படும் ரச்சின் ரவீந்திரா ஒருவேளை ஐபிஎல் தொடரில் பங்கேற்காவிட்டால்,  இந்த 3 வீரர்களில் ஒருவரை சிஎஸ்கே மாற்று வீரராக எடுக்கலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 11, 2025, 08:14 PM IST
  • ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 21இல் தொடங்குகிறது.
  • தற்போதே பல முக்கிய வீரர்கள் காயத்தால் விலகுகின்றனர்.
  • அந்த வகையில் ரச்சின் ரவீந்திராவின் காயம் பெரிய பின்னடைவு ஆகும்.
ரச்சின் ரவீந்திரா விலகிவிட்டால்... சிஎஸ்கே இந்த 3 பேரில் ஒருவரை நம்பி எடுக்கலாம்! title=

IPL 2025 CSK: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் (Champions Trophy 2025) நெருங்கி வருகிறது. பிப். 19ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் அடுத்த 20 நாள்கள் நடைபெறும். மார்ச் 9ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதன் பின் மார்ச் 21ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது.

இப்போதே பல முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் ஜஸ்பிரித் பும்ரா; ஆஸ்திரேலியாவில் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், பாட் கம்மின்ஸ்; இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தல் என பல வீரர்கள் காயத்தில் சிக்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள்.

IPL 2025 CSK: சிக்கலில் ரச்சின் ரவீந்திரா

இவர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலேயே விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்பதால் ஐபிஎல் தொடரில் (IPL 2025) விளையாடுவதும் சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது. தற்போது இந்த லிஸ்டில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவும் இணைந்துள்ளார் எனலாம். பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், ரச்சின் ரவீந்திரா காயம் (Rachin Ravindra Injury) பலத்த காயமடைந்தார்.

மேலும் படிக்க | CSK ரசிகர்களுக்கு ஷாக்: சேப்பாக்கில் தோனியை பார்க்க முடியாது!

லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் மோசமான வெளிச்சம் காரணமாக பந்து எங்கு வருகிறது என்பதை கணிக்க முடியாமல் அவர் திணறிய நிலையில், பந்து சரியாக அவரது முகத்தில் வந்த பட்டதில், ரத்தம் வழிய பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், நேற்று நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கூட அவர் விளையாடவில்லை.

IPL 2025 CSK: ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா ரச்சின் ரவீந்திரா?

எனவே அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்பதும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. ஒருவேளை இந்த காயம் பெரிதாக இருந்து, அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியாது என்றால் நியூசிலாந்து அணியை போல சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும் பின்னடைவை சந்திக்கும். கடந்த சீசனில் ரூ.1.8 கோடிக்கு எடுத்த சிஸ்கே அணி இந்த மெகா ஏலத்தில் ரூ.4 கோடியில் எடுத்தது.

அந்த வகையில், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதில் இந்த 3 வீரர்களில் ஒருவரை சிஎஸ்கே (CSK) மாற்று வீரராக எடுத்துக்கொள்ளலாம். அந்த 3 வீரர்களை (3 Potential Replacements For Rachin Ravindra) இங்கு காணலாம்.

IPL 2025 CSK: ஸ்டீவ் ஸ்மித்

ஆம், ஸ்டீவ் ஸ்மித் சமீப நாள்களாகவே சிறப்பான பார்மில் இருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினாலும், அந்த பார்ம் டி20இல் தொடருமா என்பதும் சந்தேகம்தான். ஆனால், MLC லீக்கில் அவர் சிறப்பாகவே விளையாடியிருந்தார். இந்திய சூழலும் அவருக்கு நன்கு பரிட்சயப்பட்டதுதான்.

மேலும் படிக்க | சிஎஸ்கே ரசிகர்கள் குஷியோ குஷி! பார்மிற்கு வந்த முக்கிய வீரர்! இனி அதிரடி தான்!

எனவே, ஸ்டீவ் ஸ்மித்தை (Steve Smith) சிஎஸ்கே எடுத்துக்கொண்டால் அவரை நம்பர்-3இல் மட்டுமின்றி, தேவைப்பட்டால் ஓப்பனிங்கில் கூட இறக்கிவிடலாம். தோனி, அஸ்வின் ஆகியோர் ஸ்டீவ் ஸ்மித் உடன் முன்னர் இணைந்து புனேயில் விளையாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மெகா ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் அடிப்படைத் தொகை ரூ.2 கோடி ஆகும்.

IPL 2025 CSK: பென் டக்கெட்

இங்கிலாந்து அணியின் மூன்று பார்மட்டிலும் தற்போது அதிரடி ஓப்பனரான இவர், ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. மேலும் ரச்சின் ரவீந்திராவுக்கு சரியான மாற்றும் இவராகவே இருப்பார். ஆனால், சிஎஸ்கே ரச்சினை நம்பர் 3-இல் விளையாட வைப்பார்கள் என்பதால் கான்வே இடத்தில்தான் பென் டக்கெட் (Ben Duckett) விளையாட வேண்டிவரும்.

பென் டக்கெட் ஓப்பனிங் பேக்-அப்பாக தான் இருப்பார். இருப்பினும் இடது கை அதிரடி ஓப்பனர் என்பதாலும், கான்வேவின் பார்ம் நிலையாக இல்லை என்பதாலும் இவருக்கு சிஎஸ்கே ஸ்கெட்ச் போடுவதும் தவறாக இருக்காது. இவரின் அடிப்படை தொகையும் ரூ.2 கோடி ஆகும்.

IPL 2025 CSK: கைல் மேயர்ஸ்

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர் ஓப்பனிங் ஸ்பாட்டில் பக்காவாக இருப்பார். பவர்பிளேவில் ஒன்று, இரண்டு ஓவர்களை வீச வைக்கலாம், அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே... நம்பர் 3இல் கூட இறக்கி முயற்சித்துப் பார்க்கலாம்.

கைல் மேயர்ஸ் (Kyle Mayers) லக்னோ அணியில் பெரியளவில் சோபிக்கவில்லை என்றாலும் சிஎஸ்கே இவரை செதுக்க வேண்டிய விதத்தில் செதுக்கி தேவைக்கேற்ப மாற்றிவிடும் வாய்ப்பும் உள்ளது. இவரை தவிர சிக்கந்தர் ராஸா (Sikandar Raza), டேரில் மிட்செல் (Daryl Mitchell) ஆகியோரையும் சிஎஸ்கே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | சிஎஸ்கே பிளேயிங் 11ல் இவருக்கு நிச்சயம் இடம் இருக்கும்! யார் இந்த இளம் வீரர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News