புதிய வருமான வரி மசோதா 2025... வரிசெலுத்துவோர் அடையும் சில பயன்கள் விபரம்

புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 14, 2025, 03:43 PM IST
  • வரி முறையை எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளள மசோதா.
  • புதிய வருமான வரி மசோதா குறித்த விபரம்.
  • புதிய சட்டத்தில் 1,200 விதிகள் மற்றும் 900 விளக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.
புதிய வருமான வரி மசோதா 2025...  வரிசெலுத்துவோர் அடையும் சில பயன்கள் விபரம் title=

புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். புதிய வருமான வரி மசோதாவின் நோக்கம்  வருமான வரி விதிகளை எளிதாக்குவது மற்றும் சட்ட சிக்கல்களைக் குறைப்பது என்று அரசு தெரிவித்துள்ளது.  

நாட்டின் வரி முறையை நவீனமயமாக்கவும், எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளள இந்த மசோதா தற்போதுள்ள 1961 வருமான வரிச் சட்டத்துடன் ஒப்பிடுகையில், எளிமையான மொழியில் தயாரிக்கப்பட்டது.  இதில் உள்ள வார்த்தைகள் அளவும் பாதியளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வரி செலுத்துவோர் வருமான வரி விதிகளை புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

புதிய வருமான வரி மசோதா குறித்த விபரம்

1. மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா 2025, தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை விட சொற்கள் மற்றும் பிரிவுகளின் எண்ணிக்கையில் மிகவும் சிறியது.

2. பழைய வருமான வரிச் சட்டத்தில் 5.12 லட்சம் வார்த்தைகள் இருந்த நிலையில், புதிய மசோதாவில் 2.6 லட்சம் வார்த்தைகள் மட்டுமே உள்ளன.

3. தற்போதைய சட்டத்தில் 819 பிரிவுகள் இருந்தன, அதேசமயம் புதிய மசோதாவில் 536 பிரிவுகள் மட்டுமே இருக்கும்.

4. சட்டத்தின் பல்வேறு அத்தியாயங்களும் 47ல் இருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளன.

5. புதிய சட்டத்தில் 1,200 விதிகள் மற்றும் 900 விளக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

மசோதாவில் மேலே குறிப்பிட்டுள்ள இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம், மக்கள் வருமான வரி விதிகளை எளிதில் புரிந்து கொள்ள உதவும். அதோடு வரி செலுத்தும் செயல்முறை முன்பை விட எளிதாகிறது.

புதிய மசோதாவில் வரி விகிதங்கள் மாறுமா?

1. இந்த மசோதாவில் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே உள்ள விதிகளை எளிமைப்படுத்துவதிலும் தேவையற்ற சிக்கல்களை நீக்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

2. புதிய வருமான வரி மசோதாவில், சம்பளம் தொடர்பான அனைத்து விதிகளும் ஒரே பிரிவில் வைக்கப்பட்டுள்ளன, இதனால் மக்கள் வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வது எளிதாகிறது.

3. பணிக்கொடை, ஓய்வூதியம், VRS மற்றும் ஆட்குறைப்பு இழப்பீடு போன்ற பலன்கள் சம்பளப் பிரிவிலேயே உள்ளடக்கப்படும், எனவே வரி செலுத்துவோர் வெவ்வேறு விதிகளுக்குச் செல்ல வேண்டியதில்லை.

4. டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் தொடர்பான விதிகளும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அவை விரைவாக புரிந்து கொள்ளப்படும்.

5. இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கும் (NGOs) சட்ட விதிகளின் மொழி எளிதாக்கப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி மசோதாவின் அவசியம்

சட்ட சிக்கல்கள் மற்றும் புகார்களை குறைக்கும் வகையில் இந்த புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பழைய சட்டத்தில் பல விதிகள் இருந்தன.  இவை புரிந்து கொள்ள . இப்போது விதிகள் தெளிவாகவும் எளிமையாகவும் செய்யப்பட்டுள்ளன, இதனால் யாருக்கும் எந்த தவறான புரிதலும் இல்லை.

புதிய வருமான வரி மசோதா மக்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு, மார்ச் 10ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகே அதை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

மேலும் படிக்க | EPFO வட்டி விகிதம் அதிகரிக்குமா... பிப்ரவரி இறுதியில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | EPFO அதிரடி: 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், எப்போது அறிவிப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News