Vipreet Rajyoga: 50 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் புதன், சனி பகவான், சூரிய பகவான் இணைவதால், விபரீத ராஜயோகம் உண்டாகும். இதனால், இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான காலம் பிறக்கும்.
Budhan Peyarchi 2025 In Aquarius: புதன் பெயர்ச்சியால், கும்பத்தில் மூன்று கிரகங்களும் இணைவதாலும் உருவாகும் விபரீத ராஜயோகம் என்பது சுபமான யோகம் ஆகும். இதனால், வேலையிலும் தொழிலும் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்பட்டு, பெருவாழ்வு வாழ்வார்கள்.
ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சி அடைவது 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் சுபமான தாக்கத்தையும், அசுபமான தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
அந்த வகையில், கும்பத்தில் பிப். 11ஆம் தேதி புதன் கிரகம் பெயர்ச்சி (Mercury Transit 2025) அடைந்திருக்கிறது. வரும் பிப். 27ஆம் தேதி வரை புதன் கும்பத்தில் இருப்பார்.
கும்பத்தில் (Aquarius) புதன், சனி பகவான் (Lord Saturn), சூரிய பகவான் (Sun) இணைவது 50 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கிறது. இந்த மூன்று கிரகங்களும் கும்பத்தில் இணைவதால் விபரீத ராஜயோகம் உண்டாகும்.
விபரீத ராஜயோகத்தால் (Vipreet Rajyoga) இது இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான காலகட்டமாக இருக்கும். வேலையிலும் தொழிலும் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்பட்டு, பெருவாழ்வு வாழ்வார்கள். அந்த 3 ராசிகளை இங்கு காணலாம்.
கடகம் (Cancer): விபரீத ராஜயோகத்தால் பல நன்மைகள் உங்களை தேடி வரும். பங்குச்சந்தையில் நீங்கள் செய்திருக்கும் முதலீட்டில் இருந்து லாபம் கொட்டும். சுயமாக தொழில் தொடங்குவீர்கள். அதுவும் செழிப்படைந்து உங்கள் கைகளில் வருமானம் கூடும். ரியல் எஸ்டேட், சொத்து மற்றும் நிலம் சார்ந்த வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய முன்னேற்றம் இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சுப காரியம் நடக்கவும் வாய்ப்புள்ளது.
கன்னி (Virgo): பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். கடனுக்கு கொடுத்த பணமும் திரும்பி வரும். சமூகத்தில் மதிப்பு அதிகரித்தும். வீடு வாங்கும் திட்டமும், வாகனம் வாங்கும் திட்டமும் நிறைவேறும். போட்டித்தேர்வுகளுக்கு முயற்சிப்பவர்களை நல்ல செய்தி தேடி வரும். பால்யகால நண்பனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தனசு (Sagittarius): இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிகமாக பணத்தை சேமிக்கலாம். நினைத்தெல்லாம் நடக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வாகனங்கள் வாங்குவீர்கள், நிலம் வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். பல்வேறு முதலீட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்து அதில் வருங்காலத்தில் நல்ல லாபம் ஈட்டவீர்கள். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் உங்களை தேடி வரும், குடும்பமே மகிழ்ச்சியானதாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் கணிப்புகள் மற்றும் பொது கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)