Dr Sharmika Weight Loss Tips : நம்முடன் இருப்பவர்கள், அல்லது நமக்கே கூட உடல் எடையை குறைப்பது என்பது பெரிய தலைவலியாக இருக்கும். ஒரு சிலரால் டயட் இருக்க இயலாது, ஒரு சிலரால் உடற்பயிற்சி செய்ய முடியாது. இப்படி, உடல் எடை குறையாமல் இருக்க பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு இருக்கும் சில மருத்துவ குறைபாடுகளால் எடையை குறைக்க முடியாமல் தவிப்பர். இதற்கு, மருத்துவர் ஷர்மிகா, சில வருடங்களுக்கு முன்னர் சில ஈசியான டிப்ஸ்களை கொடுத்திருக்கிறார். அவை என்னென்ன என்பதையும், அவற்றை பின்பற்றுவது எப்படி என்பதையும் இங்கு பார்ப்போம்.
சுடு தண்ணீர்:
அனைவரது வாழ்விலும் அவசியமான ஒன்றாக இருக்கிறது, தண்ணீர். ஆனால் பலர் தண்ணீர் குடிக்கவே மறந்து விடுகிறோம். எடை இழப்பிற்கு முக்கிய காரணமாக, தண்ணீர் குடிக்கும் பழக்கமும் விளங்குகிறது. பல சமயங்களில் நமக்கு தாகம் எடுப்பது கூட பசியுணர்வு போல தோன்றும். இதனால், தேவையில்லாமல் அதிகளவில் சாப்பிடுவோம். இதனை தடுக்க, நாம் அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம். இது, நம் வயிற்றை முழுதாக உணர வைப்பதுடன் கொழுப்பு குறையவும் உதவுமாம். இதனால் உணவு செரிமானமும் வேகமாக நடக்கும். குடிப்பதை சுடுநீராக குடித்தால், கொழுப்பு குறையவும் உதவுமாம்.
நடைப்பயிற்சி:
இந்த வேகமான வாழ்க்கை சூழலில் நம்மில் பலருக்கு உடற்பயிற்சி செய்ய அல்லது எழுந்து நடக்க நேரமே இல்லாமல் போய்விட்டது. எனவே, ஒரு நாளைக்கு தினமும் 30 நிமிடங்கள் மற்றும் மாலையில் 30 நிமிடங்கள் நடக்கலாம் என மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். இதை தினமும் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இது சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுமாம்.
உறக்கம்:
நன்றாக உறங்காதவர்கள், உடல் எடை அதிகரிக்க பலவித காரணங்கள் இருக்கலாம். இரவில் உறக்கம் வரவில்லை என்றால், மன அழுத்தம் எளிதாக தொற்றிக்கொள்ளும். இதனால், அதிகளவில் சாப்பிடவும் செய்வோம். ஒரு சிலர் இதனால் சாப்பிடாமலும் இருப்பர். எனவே, இதனை தடுக்க ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரம் சரியான உறக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். இரவு 10 மணிக்கு உறங்கி காலை 5 மணிக்கு எழுந்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார். இந்த நேரத்தில்தான் மூளையின் செயல்பாடு சரியாக இருக்குமாம். இந்த நேரத்தில் சரியாக உறங்கினால், சருமமும் பளபளக்கும் என்கிறார்.
போர்ஷன் கன்ட்ரோல்:
நாம் எந்த அளவிற்கு சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்தும் நம் உடல் எடை கூடுவதும் குறைவதும் அமையும். எனவே, காய் எந்த அளவிற்கு சாப்பிடுகிறோம், சாப்பாடு எந்த அளவிற்கு சாப்பிடுகிறோம் என்பதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரிய அளவு டிஃபன் பாக்ஸ் அல்லது தட்டில் சாப்பிடுவோம் என்றால், அந்த அளவை மாற்றி அதற்கு ஏற்றவாறு அளவில் சாப்பிட வேண்டியது அவசியம்.
நிலைத்தன்மை:
உடல் எடையை குறைக்கும் இந்த முயற்சியில், முதலில் அனைவருக்கும் நிலைத்தன்மை இருப்பது அவசியமாகும். எனவே, ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு செய்து விட்டு இந்த முயற்சிகளை கைவிட்டு விடக்கூடாது. எடை குறையவில்லை என்றாலும் கூட நிலையாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளை எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் பிறக்கும்.
மேலும் படிக்க | 123 கிலோ இருந்த இன்ஸ்டா பிரபலம்... 48 கிலோ உடல் எடையை குறைக்க உதவியது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ