முதுமையிலும் சுருக்கங்கள் இல்லாத சுத்தமான, களங்கமற்ற மற்றும் பளபளப்பான சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். கரும் புள்ளிகள், பருக்கள் மற்றும் தழும்புகள், முக சுருக்கங்கள் ஆகியவை காரணமாக, முகத்தின் அழகு மங்கத் தொடங்குகிறது. உங்கள் தன்னம்பிக்கையும் பாதிக்கப்படுகிறது.
மாசு மருவற்ற இளமையான சருமத்தை பெற, பருக்கள், கரும்புள்ளிகளை அகற்றவும், பல்வேறு வகையான கிரீம்களைப் பயன்படுத்தும் வழக்கம் பலருக்கு உள்ளது. இது உங்கள் பிரச்சனைகளை நீக்க உதவுகிறது என்றாலும், இதற்கான பக்க விளைவுகள் உண்டு எனதை மறுக்க இயகாது. க்ரீம்களில் உள்ள இரசாயன பொருட்கள் உங்கள் சருமத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அத்தகைய சூழ்நிலையில், வீட்டு வைத்தியம் மூலம் நீங்கள், உங்கள் சரும சுருக்கங்களையும், கரும்புள்ளிகள் மற்றும் தழுப்புகளையும் நீக்கி, இளமையான சருமத்தை பெறலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கையான பேஸ் பேக்குகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
சில அற்புதமான இயற்கை பேஸ்பேக்குகள்
எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் பேக்
எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால், இந்த மாஸ்க் பருக்களை நீக்கி, தழும்புகளை குறைக்கும். உண்மையில், இந்த இரண்டு பொருட்களும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது முகப்பருவை நீக்குவதோடு மட்டுமல்லாமல், சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, சருமத்தை இளமையாக பராமரிக்க உதவும்.
தக்காளி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
தக்காளி சாறுடன் தயிர் கலந்து முகத்தில் தடவினால் சருமம் பளபளப்பாகும், முகப்பரு தாக்கமும் குறையும். தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில், தக்காளியில் வைட்டமின் சி உள்ளது. இது உங்கள் முகத்தின் பொலிவை பராமரிக்க உதவுகிறது.
மஞ்சள் மற்றும் கடலை மாவு மாஸ்க்
மஞ்சள் தூள் மற்றும் கடலைமாவினை மற்றும் தயிர் கலந்து முகத்தில் தடவினால், கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மற்றும் தழும்புகள் மறையும். மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கும் ஆற்றல் கடலை மாவில் காணப்படுகின்றன. உங்கள் சரும பாதிப்பை சரிசெய்வதில் உதவியாக இருக்கும்.
உருளைக்கிழங்கு மற்றும் தேன் ஃபேஸ் பேக்
உருளைக்கிழங்கு சாற்றில் தேன் கலந்து முகத்தில் தடவவும். சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதுடன் இந்த மாஸ்க் முகத்தை பளபளப்பாக்குகிறது . முகப்பருவை குறைக்கிறது. ஏனெனில் இதன் சாற்றில் உள்ள வைட்டமின் பி6 ஆண்டி ஏஜிங் பண்புகளை கொண்டுள்ளதால், முதுமை ஏற்படாமல் தடுக்கிறது.
கிரீன் டீ ஃபேஸ் பேக்
க்ரீன் டீ நீரில் தேன் கலந்து முகத்தில் தடவினால், சருமம் தெளிவடைவதோடு, கரும்புள்ளிகளின் பிற மாசுமருக்களையும் போக்கும். கிரீன் டீயில் வைட்டமின் ஈ உள்ளதால், சருமத்தை ஈரப்பதமகா பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள மருத்துவ பண்புகள் சருமத்தை குணப்படுத்தவும், பளபளப்பாகவும் உதவுகிறது.
முக்கிய குறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியங்களை தவறாமல் பின்பற்றுவதன் மூலம், உங்கள் சருமத்தை இளமையாக பராமரிக்கலாம். ஆனால் ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமாக இருக்கும். எனவே இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றும் முன், ஒருமுறை நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.