ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: மாறும் விதிகள்? 65 வயதிலேயே 5%, 10%, 15% கூடுதல் ஓய்வூதியம்?

Central Government Pensioners latest news: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. கூடுதல் ஓய்வூதிய விதிகளில் மாற்றம் வரக்கூடும். 65 வயதிலேயே இனி கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா?

Additional Pension For Central Government Pensioners: கூடுதல் ஓய்வூதிய வயது குறித்து நாடாளுமன்றக்குழு அரசுக்கு ஒரு பரிந்துரையை அளித்துள்ளது. 65 வயது முதல் 75 வயது வரைதான் ஓய்வூதியதாரர்களுக்கு அதிக பணத்தேவை இருக்கிறது என்றும், இதன் காரணமாக, 80 வயதிற்குப் பிறகு ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கு பதிலாக 65 வயதிலிருந்தே கூடுதல் ஓய்வூதியத்தை அளிக்கத் தொடங்க வேண்டும் என நாடாளுமன்றக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

1 /11

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இது அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தையும் நிம்மதியையும் அளிக்கும். ஓய்வூதியதாரர்களின் கூடுதல் ஓய்வூதியம் தொடர்பாக ஒரு புதுப்பிப்பு வந்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /11

2024 ஆம் ஆண்டில், இந்திய அரசு 80 வயதை எட்டிய ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த கூடுதல் ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நாளுக்கு நாள் மோசமாகும் பணவீக்கத்தைச் சமாளிக்கவும் மருத்துவச் செலவுகள் மற்றும் வீட்டுவசதி போன்ற பிற அத்தியாவசிய செலவுகளைச் சமாளிக்கவும் உதவும்.

3 /11

இதற்கான குறிப்பாணை அக்டோபர் 18, 2024 அன்று வெளியிடப்பட்டது. ஓய்வூதியதாரர்கள் 80 வயதை அடையும் போது, ​​அவர்கள் கூடுதல் ஓய்வூதியத் தொகைகளைப் பெறத் தொடங்குவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டது.

4 /11

80 வயதை எட்டிய பிறகு ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் கூடுதல் நிதி உதவி பற்றிய விரிவான வழிகாட்டுதலை DoPPW வழங்கியது. CCS விதிகள் 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 ஐப் பயன்படுத்தி ஓய்வூதியதார்ரகள் இந்த ஓய்வூதியத் தொகையைப் பெறலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

5 /11

ஓய்வூதியதாரர்கள் 80 வயதை எட்டியவுடன் அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். 80 வயதுக்கு பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் ஓய்வூதியம் 10% அதிகரிக்கப்படும். ஓய்வூதியதாரர் 100 வயதை எட்டிய பின்னர், அவர்கள் மொத்த ஓய்வூதியத்தில் 100% வரை கூடுதல் ஓய்வூதியமாகப் பெற வழைவகை செய்யப்பட்டுள்ளது.

6 /11

வயது வாரியாக யாருக்கு எவ்வளவு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்? 80 வயது முதல் 85 வயது வரையுள்ளவர்களுக்கு, அடிப்படை ஓய்வூதியத்தில் 20% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். 85 முதல் 90 வயது வரை உள்ளவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 30% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். 90 வயது முதல் 95 வயது வரை, அடிப்படை ஓய்வூதியத்தில் 40% கூடுதல் ஓய்வூதியமாக கிடைக்கும்.

7 /11

95 வயது முதல் 100 வயது வரையிலான ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 50% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 100% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.

8 /11

கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும் வயதை விரைவில் அரசு குறைக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. இது பற்றி ஓய்வூதியதாரர்களுக்கு கூடிய விரைவில் ஒரு புதிய அப்டேட் வரக்கூடும். 

9 /11

65 வயது முதல் 75 வயது வரைதான் ஓய்வூதியதாரர்களுக்கு அதிக பணத்தேவை இருக்கிறது என்றும், இதன் காரணமாக, 80 வயதிற்குப் பிறகு ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கு பதிலாக 65 வயதிலிருந்தே கூடுதல் ஓய்வூதியத்தை அளிக்கத் தொடங்க வேண்டும் என நாடாளுமன்றக்குழு அரசுக்கு ஒரு பரிந்துரையையும் அளித்துள்ளது. 

10 /11

நாடாளுமன்றக்குழு 65 வயதில் தொடங்கி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் ஓய்வுதியத் தொகையை 5% உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது 65 வயதில் 5%, 70 வயதில் 10%, 75 வயதில் 15%, 80 வயதில் 20% என்ற வகையில் ஓய்வூதியத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து இன்னும் தெளிவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. 

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் ஓய்வூதியம் அல்லது கூடுதல் ஓய்வூதியம்  பெறத் தொடங்கும் வயது ஆகியவற்றில் மாற்றத்திற்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.