Valentines Day 2025 Dress Color Code Meaning : பிப்ரவரி 14ஆம் தேதியான நாளை, காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில், எந்த நிற ஆடை உடுத்தினால், என்ன அர்த்தம்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Valentines Day 2025 Dress Color Code Meaning : காதலர் தினத்தன்று மட்டும்தான் நாம் காதலை கொண்டாட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இருப்பினும், உலகளவில் பிப்., 14ஆம் தேதிதான் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிங்கிளாக இருப்பவர்கள், ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் என அனைவருக்கும் சில கலர் கோட் இருக்கின்றன. இந்த தினத்தில், என்ன நிற ஆடை உடுத்தினால், என்ன அர்த்தம் தெரியுமா? அது குறித்து இங்கு பார்ப்போம்.
வெள்ளை உடை அணிந்திருந்தால், தாங்கள் இருக்கும் காதல் உறவில் அந்த நபர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என அர்த்தம். புதிதாக காதல் உறவில் நுழைந்து மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இந்த நிற உடையை உடுத்துங்கள்.
ஆரஞ்சு நிற உடை அணிந்திருந்தால் அவர்கள் யாரையோ மனதில் நினைத்திருக்கிறார்கள் என அர்த்தம். அவர்கள் தன்னை வந்து அப்ரோச் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
பிங்க் நிற உடை அணிந்திருந்தால், அவர்கள் யாருடையே ப்ரபோசலையோ ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். அது காதல் ப்ரபோசலாகவும் இருக்கலாம் அல்லது திருமண ப்ரபோசலாகவும் இருக்கலாம்.
மஞ்சள் நிற உடை அணிந்திருப்பவர்கள், பிறரிடம் காதலை விட நட்பை அதிகமாக பாராட்டுகிறார்கள் என அர்த்தம். தாங்கள் இருக்கும் நட்புறவு பிடித்திருந்தால் அவர்கள் இந்த நிற ஆடையை அணியலாம்.
நீல நிற உடை அணிந்திருப்பவர்கள் பிறரை விட தன்னை அதிகமாக காதலித்து வருகின்றனர் என அர்த்தம். சிங்கிளாக இருப்பவர்கள், தங்களுக்கு அந்த சிங்கிள் வாழ்க்கை பிடித்திருந்தால் இந்த நிற ஆடையை அணியலாம்.
இருவருக்கும் பிடித்திருந்து, இன்னும் ஒருவருக்கொருவர் காதலை சொல்லாமல் இருக்கிறீர்கள் என்றால், அவர்கள் பச்சை நிற ஆடையை அணியலாம். இந்த நிற ஆடையை அணிபவர்கள், யார் மீது இருக்கும் காதலை இன்னும் தெரிவிக்காமல் இருக்கிறார் என அர்த்தம்.
அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்க நாம் உபயோகிக்கும் ஒரு ஆடை, கருப்பு. இந்த நிற ஆடையை அணிந்திருப்பவர்கள் சிங்கிளாக சந்தோஷமாக இருக்கிறார்கள் என அர்த்தம்.