Latest OTT Releases This Week Valentines Day 2025 : காதலர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சில படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அவற்றை, எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Latest OTT Releases This Week Valentines Day 2025 : பிப்ரவரி 14ஆம் தேதியான நாளை காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, ஓடிடியில் பல காதலர் தின திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
ஜெயம் ரவி-நித்யா மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதனை காதலர் தினத்தை முன்னிட்டு உங்கள் அன்புக்குரியவருடன் சேர்ந்து பார்க்கலாம்.
மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன படம், மார்கோ. உன்னி முகுந்தன் நடித்திருக்கும் இந்த படத்தை பிப்ரவரி 14ஆம் தேதியன்று சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம்.
இந்தியில் உருவாகியிருக்கும் தொடர் ப்யார் டீசிங். காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த தொடர் ஜீ 5 தளத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.
மலையாளத்தில் வெளியான ஜாலியான படம், மனோராஜ்யம். இந்த படத்தை மனோரமா மேக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.
யாமி கௌதம், பிராதிக் காந்தி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தூம் தாம். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.
காதல் ஹாலிவுட் படம், My Fault London. இந்த படத்தை ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
மேற்கூறியவை மட்டுமன்றி இன்னும் சில படங்களும் ஓடிடியில் வரும் பிப்., 14-ஐ முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா? விஜயநாடா-கன்னடம்-நம்ம ஃப்ளிக்ஸ் ஜெனரேஷன்ஸ் ஆஜ் கல்-இந்தி-ஹாட்ஸ்டார் இஷ்க் இண்டரப்டட்-ஹாட்ஸ்டார் லவ் லைஃப் லாஃப்டே-இந்தி-ஹாட்ஸ்டார் பாபி அவுர் ரிஷி கி லவ் ஸ்டோரி-இந்தி-ஹாட்ஸ்டார் ஐ ஆம் மேரீட் பட்-சீன மொழி-நெட்ஃப்ளிக்ஸ் தொடர் மெலோ-கொரியன்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர் 500000 ஃப்ர்ஸ்ட் டேட்ஸ்-ஆங்கிலம்-ப்ரைம் தொடர் டெத் பிஃபோர் தி வெட்டிங்-போலிஷ்-நெட்ஃப்ளிக்ஸ் ஹனி மூன் க்ரேஷர்-ஃப்ரெஞ்ச்-நெட்ஃப்ளிக்ஸ் சர்வைவிங் ப்ளாக் ஹாக் டவுன்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர் மதுரை பையனும் சென்னை பொண்ணும்-தமிழ்-ஆஹா தொடர் தி மோஸ்ட் பியூடிஃபுல் கேர்ள் இன் தி வர்ல்ட் -இந்தோனேசிய தொடர்-நெட்ஃப்ளிக்ஸ்