Viral Video: தினமும் சமூக ஊடகங்களில் பல வித வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவற்றில் சில காண்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், சில வீடியோக்கள் நம்மை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன. சில நம்மை பதபதைக்க வைக்கின்றன. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் வைரலாகும் பயங்ர வீடியோ
கண்களால் நம்ப முடியாத அளவில் அதிசயமான சம்பவங்கள் இதில் நடக்கின்றன. சிலியின் பஹியா எல் அகுயிலாவில் 24 வயது நபர் ஒருவர் தனது தந்தையுடன் கயாக்கிங் செய்து கொண்டிருந்தபோது, ஒரு கூன் முதுகு திமிங்கலம் அவரது மஞ்சள் படகை விழுங்கி, அதிசயத்தக்க வகையில் அவரை வெளியே துப்பியது. அந்த ராட்சத பாலூட்டி அட்ரியன் சிமன்காஸ் என்ற அந்த நபரை கண நேரம் விழுங்கி, பின்னர் அவரை காயமின்றி விடுவிக்கிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
சிலியில் நடந்த சிலிர்ப்பூட்டும் சம்பவம்
சிலியின் தெற்குப் பகுதியில் உள்ள படகோனியா பகுதியில் உள்ள மாகெல்லன் ஜலசந்தியில் உள்ள சான் இசிட்ரோ கலங்கரை விளக்கம் அருகே சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
தனது மகன் கயாக்கிங் செய்துகொண்டிருப்பதை அட்ரியன் சிமன்காஸின் தந்தை, டெல், மற்றொரு கயாக்கில் இருந்து வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கிறார். தனது மகனை நோக்கி வரும் திமிங்கலத்தை அழகான அலைகள் என அவர் முதலில் நினைத்துக்கொள்கிறார். ஆனால் பிறகுதான் விபரீதமே நடக்கின்றது.
திமிங்கலம் தனது மகனை விழுங்கி பின் வெளியே துப்பிய பிறகு, அவர் தனது மகனை ‘ஸ்டே காம்’ என்று சொல்லி சமாதானப்படுத்துவதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோ காண்பவர்களையும் ஒரு நிமிடம் கதிகலங்கச் செய்கின்றது.
மனதை பதபதைக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
Adrian Simancas, 24, was briefly swallowed by a humpback whale while kayaking with his father, Dell, off Punta Arenas, Chile. The whale emerged from the water, engulfing Adrian & his kayak. He was then spat out back into the sea
ot sure why, but this reminds me of my wife… pic.twitter.com/qdoKdVYPbh
— True Crime Updates (@TrueCrimeUpdat) February 13, 2025
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அட்ரியன் சிமன்காஸ், தனது முகத்தில் ஒரு மெலிதான திரை போன்ற அமைப்பை உணர்ந்ததாகவும், தான் திரும்பிப் பார்த்தபோது அடர் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களிலான உருவம் நெருங்கி வருவதைக் கண்டதாகவும் அதன் பின்னர் தான் கடலின் கீழ் இழுக்கப்பட்டதாகவும் விவரித்தார்.
அந்த தருணத்தில் தன்னால் இனி எதுவும் செய்ய முடியாது என்பதை தான் புரிந்துகொண்டதாக கூறும் அட்ரியன், தனக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் தான் இறக்கவுள்ளதாக அஞ்சியதாகவும் கூறியுள்ளார்.
"அது ஏற்கனவே என்னைத் விழுங்கி தின்றுவிட்டதாக நினைத்தேன்," என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், சற்று நேரத்தில் தனது உயிர்காக்கும் அங்கி தன்னை மீண்டும் மேலே இழுப்பதை அவர் உணர்ந்தார். சில நொடிகளில், அவர் மேலே வந்து நிலைமையைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்.
தான் மேலே வந்து மிதக்கத் தொடங்கியபோது, தனது தந்தைக்கு ஏதாவது நடக்குமோ என்ற அச்சம் தனக்கு வந்ததாகவும், சரியான நேரத்தில் கரையை அடைய முடியுமா என்ற சந்தேகம் தோன்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது தந்தைக்கு ஹைபேதெரிமியா ஏற்பட்டுவிடுமோ என அவர் அஞ்சினார். இருப்பினும், சம்பவத்திற்குப் பிறகு தந்தை, மகன் இருவரும் பாதுகாப்பாக கரையை அடைந்தனர்.
மீண்டும் கயாக்கிங் செல்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, தந்தை மற்றும் மகன் இருவரும் தயக்கமின்றி, "கண்டிப்பாக செல்வோம்" என பதிலளித்தனர்.
மேலும் படிக்க | மகா கும்பமேளாவின் பேரழகியா இது.. ரசிகர்கள் அதிர்ச்சி! மோனாலிசாவின் Fake வீடியோ வைரல்
மேலும் படிக்க | பாம்பிடம் மூக்கில் கடி வாங்கிய பெண்! அப்பறம் என்னாச்சு? வைரலாகும் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ