ஜெய், யோகி பாபு நடித்துள்ள Baby & Baby படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

Baby & Baby Movie Review: பிரதாப் இயக்கத்தில் ஜெய், யோகி பாபு மற்றும் பிரக்யா நடித்துள்ள Baby & Baby படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Written by - RK Spark | Edited by - Sudharsan G | Last Updated : Feb 14, 2025, 01:06 PM IST
  • யோகி பாபு, ஜெய் நடித்துள்ள Baby & Baby
  • இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
  • பிரதாப் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
ஜெய், யோகி பாபு நடித்துள்ள Baby & Baby படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்! title=

Baby & Baby Movie Review: பிரதாப் இயக்கத்தில் ஜெய் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Baby & Baby படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

Baby & Baby - படக்குழுவினர்

யுவராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், யோகி பாபு, பிரக்யா நக்ரா,  சத்யராஜ், மொட்ட ராஜேந்திரன், இளவரசு, நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லே, சிங்கம்புலி, ஸ்ரீராம், டைகர் தங்கதுரை, லொள்ளு சபா சேசு, ராமர் ஆகியோர் நடித்துள்ளனர். டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்க, சாரதி ஒளிப்பதிவும், ஆனந்த லிங்க குமார் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

Baby & Baby - படத்தின் கதை

சத்யராஜ் மற்றும் நிழல்கள் ரவி இருவரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவர்களது மகன் மற்றும் மகள் முறையே ஜெய் மற்றும் பிரக்யா ஆவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்கு தப்பி விடுகின்றனர். மறுபுறம் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இளவரசு தனது மகன் யோகி பாபுவை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புகிறார். அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் யோகி பாபு.

மேலும் படிக்க | Lesbian ஆக நடித்திருக்கும் லிஜோ மோல்! காதல் என்பது பொதுவுடமை திரைவிமர்சனம்!

ஜெய் மற்றும் யோகி பாபு அவர்களின் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்வதால் இருவீட்டாரும் மிகுந்த கோபத்தில் உள்ளனர். தனக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது என்று தெரிந்ததும் சத்யராஜ் தனது மகன் மற்றும் மருமகளை மீண்டும் வீட்டிற்கு அழைக்கிறார். மறுபுறம் இளவரசு தனக்கு பெண் வாரிசு பிறந்துள்ளது என்று தெரிந்ததும் யோகி பாபுவை வீட்டிற்கு அழைக்கிறார். இவர்கள் இருவரும் ஊருக்கு திரும்பும் போது இவர்கள் இருவரது குழந்தையும் மாறிவிடுகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பது தான் Baby & Baby படத்தின் கதை. 

Baby & Baby - படம் எப்படி இருக்கு?

ஜெய்க்கு இணையாக யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருவரில் யார் ஹீரோ என்று தெரியாத அளவிற்கு இரண்டு பேருக்கும் சரிசமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் யோகி பாபு தான் பல இடங்களில் படத்தை காப்பாற்றுகிறார். 

ஆரம்பக் காட்சிகளில் நன்றாக நடித்திருந்த ஜெய் அதன் பிறகு வரும் காட்சிகளை பெரிதாக ஈர்க்கவில்லை. சத்யராஜ் மற்றும் இளவரசு போன்ற சீனியர் நடிகர்களும் இந்த படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளனர். முதல் பாதியை ஒப்பிடும்போது இரண்டாம் பாதி சற்று சுவாரசியமாக உள்ளது.

Baby & Baby - டுவிஸ்ட் எதார்த்தமாக இல்லை

ஒன் லைன் ஆக கேட்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கும் இந்த கதை இரண்டு மணி நேர படமாக அதிக சுவாரசியத்தை கொடுக்கவில்லை. படத்தின் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை நம்மால் படத்தில் ஒன்ற முடியவில்லை. படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் அவர்கள் யாருமே அவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தவில்லை. 

படத்தில் வரும் முக்கியமான டுவிஸ்டும் எதார்த்தமாக இல்லை. அதுவே படத்தின் மீது நம்மை ஒன்ற விடாமல் செய்து விடுகிறது. ஒரு சில இடங்களில் வரும் காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. குறிப்பாக தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், ராமர் ஆகியோர் வரும் காட்சிகள் அனைத்தும் நன்றாகவே உள்ளது.

Baby & Baby - நல்ல கதை... ஆனால்

டி இமான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமாராகவே இருந்தது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் கலை இயக்கம் ஆகியவையும் படத்திற்கு ஏற்றார் போல் தான் உள்ளது. Baby & Baby நல்ல ஒரு கதையாக இருந்தாலும் இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை அதிகப்படுத்தி இருக்கலாம். இரண்டு குழந்தைகள் கைமாறும் காட்சிகளையும் இன்னும் கொஞ்சம் நம்பும்படி எடுத்திருக்கலாம். எந்தவித லாஜிக்கும் பார்க்காமல் குடும்பத்துடன் சென்று ரசிப்பவராக இருந்தால் இந்த படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கலாம்.

மேலும் படிக்க | ஒரே மாதிரி இருக்கும் 2 போஸ்டர்கள்! லவ் மேரேஜ் போஸ்டரில் இதை கவனிச்சீங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News