New Income Tax Bill 2025 Latest News: வருமான வரி மசோதா 2025: யூனியன் பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்பட்ட பிறகு எதிர்பார்க்கப்படும் புதிய வருமான வரி மசோதா, இன்று (பிப்ரவரி 13, வியாழக்கிழமை) மக்களவையில் மத்திய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படும். அதாவது வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்படுவதற்காக பட்டியலிடப்பட்டு உள்ளது.
நேற்று (பிப்ரவரி 12, புதன்கிழமை) மக்களவை செயலகம் வெளியிட்ட நிகழ்ச்சி நிரலின்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா 2025 ஐ அறிமுகப்படுத்துவார் எனக் கூறப்பட்டு இருந்தது.
வருமான வரிச் சட்டத்தில் ஏன் மாற்றம் செய்யப்படுகிறது?
தற்போதைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப தெளிவான மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்திருந்தார். இதன் காரணமாக 1961 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரி சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
புதிய வருமான வரிச் சட்டம் கொண்டு வரக் காரணம் என்ன?
தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரிச் சட்டம் 1961 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அந்த காலத்திற்கு ஏற்ப அப்பொழுது வருமான வரிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் சில விதிகளை புரிந்துக் கொள்வதற்கு மிகவும் சிக்கலாக இருக்கிறது. மேலும் வருமான வரிச் சட்டம் 1961 சட்டத்தில் சிரமான சிக்கலான வாரத்தைகளை கொண்டு உள்ளது. டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப அதனை எல்லாம் சரி செய்ய புதிய வருமான வரிச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.
புதிய வருமான வரி மசோதா 2025 எப்படி உருவாக்கப்பட்டது?
புதிய வருமான வரிச் சட்டம் இயற்ற நிபுணர் குழு அமைக்கப்பட்டு அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதன் மூலம் கிடைத்த 6500 பரிந்துரைகளை கொண்டு புதிய வருமான வரி மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து புதிய வருமான வரி மசோதா 2025 மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்பிறகு நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்படும்.
புதிய வருமான வரிச் சட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?
புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, வரி நிர்வாக விதிகள், இணக்க வழிமுறைகள், டிஜிட்டல் வரி கண்காணிப்பு அமைப்பு போன்ற பணிகளை முடிவுகளை செய்ய மத்திய அரசு நேரடி வரிகள் வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல புதிய மசோதாவில், "விளிம்பு நிலை, நன்மை வரி" தொடர்பான முக்கியமான பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. "விளக்கங்கள் அல்லது விதிகள்" இல்லை. புதிய வருமான வரி மசோதா படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் எளிமையாக இருக்கும். இந்த மசோதா வரி செலுத்துவோரின் "உரிமைகள் மற்றும் கடமைகளை" கோடிட்டுக் காட்டும் 'வரி செலுத்துவோர் சாசனம்' இடம் பெற்றுள்ளது. எனவே குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வரி செலுத்துவோர் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் புதிய வருமான வரிச் சட்டத்தின் மொழி எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
புதிய வருமான வரி மசோதாவில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
புதிய வருமான வரி மசோதாவில், 536 பிரிவுகள், 23 அத்தியாயங்கள் மற்றும் 16 அட்டவணைகள் உள்ளன. 622 பக்கங்களைக் கொண்ட புதிய வருமான வரிச் சட்டத்தில் எந்தவொரு புதிய வரியையும் விதிப்பது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. முந்தைய 1961 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தில் 298 பிரிவுகள், 880 பக்கங்கள், 14 அட்டவணைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வருமான வரி சட்டம் எப்பொழுது அமலுக்கு வரும்?
புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வருமான வரி மசோதாவில் புதிதாக வரி சேர்க்கப்பட்டு உள்ளதா?
புதிய வருமான வரி சட்டத்தில் புதிதாக எந்த வரிகளும் சேர்க்கப்படவில்லை. ஆனால் பழைய வரி மற்றும் புதிய வரி என இரண்டு வரிகளும் இடம் பெற்றுள்ளன. வரி செலுத்துவோர் அவர்களுக்கு ஏற்ப வரி முறையை தேர்வு செய்துக்கொள்ளலாம்.
வரி ஆண்டு என்றால் என்ன?
புதிய வருமான வரி மசோதாவில், 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வருமான வரி ரிட்டன் தாக்கலில் பயன்படுத்ப்தபடும் 'முந்தைய ஆண்டு' என்ற வார்த்தையை 'வரி ஆண்டு' என்று மாற்றப்பட்டு உள்ளது. மேலும் 'மதிப்பீட்டு ஆண்டு' என்ற என்பதும் நீங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - இனி யாரெல்லாம் வரி கட்ட தேவையில்லை? பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
மேலும் படிக்க - வருமான வரியை சேமிக்கணுமா? பலருக்கு தெரியாத 4 வழிகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ