Parasakthi To Clash With Jana Nayagan: தமிழ் திரை உலகில் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். கடந்த ஆண்டு முதல் அரசியலிலும் களம் கண்டுள்ள இவர் விரைவில் திரையுலகை விட்டு விலகி முழு நேரமாக அரசியலுக்குள் நுழைய இருக்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன் படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜயுடன் சேர்ந்து நடித்த சிவகார்த்திகேயன்..
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் தி கோட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் எதிர்பாராத விதமாக கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர், சிவகார்த்திகேயன். சில நிமிட காட்சிகளிலேயே நடித்திருந்தாலும், இவரது கதாபாத்திரம் பேசப்பட ஒரு முக்கிய டயலாக் காரணமாக இருந்தது.
விஜய் அரசியலுக்கு செல்வதையும் தன்னிடத்திற்கு இனி சிவகார்த்திகேயன் தான் வர வேண்டும் என்பதை குறிப்பிடும் வகையிலும் அவர், “துப்பாக்கிய புடிங்க சிவா” என சிவகார்த்திகேயனிடம் கூறுவார். அதற்கு சிவகார்த்திகேயனும், “நீங்க இதை விட வேற ஏதோ பெரிய வேலையா போறீங்கன்னு தெரியுது, இனிமே இத நான் பாத்துக்குறேன்” என்று கூறுவார். இதற்கு விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு டாப் நடிகர் இன்னொரு நடிகரிடம் இப்படி கூறிவிட்டு செல்வதற்கு ஒரு பெரிய மனது வேண்டுமென ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் எழுந்தன.
சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு?
விஜயின் இடத்திற்கு இனி அடுத்து சிவகார்த்திகேயன் தான் என திரை வட்டாரத்தினர் பேச ஆரம்பித்தனர். இதிலிருந்து சிவகார்த்திகேயன் கமிட்டாகும் படங்கள் வெளியாக இருக்கும் படங்கள் என அனைத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. அதற்கு ஏற்ப கடைசியாக வெளியான அமரன் படமும் பெரிய ஹிட் அடித்தது. அடுத்து அவர் நடித்து வரும் படம் பராசக்தி.
பராசக்தி படத்தின் பெயர், நடிக்க இருப்பவர்களின் விவரம் உள்ளிட்டவை சமீபத்தில் தான் வெளியாகின. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
விஜய்க்கு போட்டியாக?
விஜய் கடைசியாக நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படம் ஒரு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு வேலைகள் இன்னும் நிறைய இருக்கிறது என்பதால், படத்தின் ரிலீஸ் தள்ளி போட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பராசக்தி திரைப்படத்தின் வேலைகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தையும் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட அப்படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தகவல் வெளியாகியிருக்கும் சமயத்தில், எக்காரணத்தைக் கொண்டும் தன் படம் விஜய் படத்துடன் வெளியாகி விடக்கூடாது என்பதில் சிவகார்த்திகேயன் குறிக்கோளோடு இருக்கிறாராம். இதனால் ஜனநாயகன்படத்தின் ரிலீசுக்கு முன்பே இந்த படத்தை வெளியிட அவர் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள், “இந்த மனுஷனை போய் தப்பா நெனச்சுட்டோமே..இப்படி ஒரு நல்ல வேலையை பார்த்துள்ளாரே..” என இவரை புகழ்ந்து வருகின்றனர்.
ஒரு முறை நேர்காணலில் பேசிய சிவகார்த்திகேயன், “துப்பாக்கிய புடிங்க சிவா” டைலாக் ஸ்கிரிப்டிலேயே இல்லை என்றும் அதை நடிகர் விஜய்தான் சேர்க்க சொன்னதாகவும் கூறினார். இப்படி, திரைக்கு முன்னரும் திரைக்கு பின்னாலும் நல்ல நட்பு பாராட்டும் இவர்களுக்குள் இது போன்ற போட்டி பொறாமையே நிகழாது எனக்கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அஜித்தின் பாராட்டால் அசந்து போன சிவகார்த்திகேயன்! என்ன சொன்னார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ