TN Cabinet Change 2025: அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழிற் வாரியம் தற்போது அமைச்சர் பொன்முடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தற்போது செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையின் பேரில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்முடி வனத்துறை உடன் காதி மற்றும் கிராம தொழிற் வாரியம் இலாக்காவை கூடுதலாக கவனித்துக்கொள்வார். ராஜகண்ணப்பன் பால்வளத்துறையை மட்டும் கவனித்துக்கொள்வார்.
பொன்முடி மற்றும் ராஜகண்ணப்பன் - அமைச்சரவையில் இதுவரை...
2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைந்தபோது, அமைச்சர் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் உயர்கல்வித்துறை கோவி.செழியனுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது, அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அவருக்கு காதி மற்றும் கிராம தொழிற் வாரியம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
முதலில் ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. அதன்பின், எஸ்.எஸ். சிவசங்கருக்கு போக்குவரத்து துறையை ஒதுக்கப்பட்டு, அவரின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டு, பிற்படுத்தப்பட்ட நலத்துறை வி.மெய்யநாதனுக்கு ஒதுக்கப்பட்டு, ராஜகண்ணப்பன் பால்வளத்துறை மற்றும் காதி மற்றும் கிராம தொழிற் வாரியம் ஆகிய இலக்காவை பெற்றது குறிப்பிடத்தக்கது.
திமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம்
திமுக அமைச்சரவையில் மட்டுமின்றி, திமுகவிலும் சில மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அடங்கி உள்ள சட்டமன்ற தொகுதிகளின் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவில் 72 மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில், 75 மாவட்ட செயலாளர்களாக உயர்ந்துள்ளது. ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சு. முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக என். நல்லசிவம், ஈரோடு மத்திய மாவட்ட செயலாளராக தோப்பு வெங்கடாசலம், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக செல்வராஜ், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக என். தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக இல. பத்மநாபன், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக செஞ்சி மஸ்தான், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக கௌதம சிகாமணி, விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக மருத்துவர். ஆர். லட்சுமணன், மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக கோ. தளபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவை மட்டுமின்றி மாவட்ட செயலாளர்கள் மாற்றமும் நடந்துள்ளது. தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த க. அண்ணாதுரை விடுவிக்கப்பட்டு, பழனிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட செயலாளராக இந்த முபாரக் விடுவிக்கப்பட்டு, கே.எம். ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராக இருந்த டி.பி.எம். மைதீன்கான் விடுவிக்கப்பட்டு, அப்துல்வகாப் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த டி.ஜெ.எஸ். கோவிந்தராஜன் விடுவிக்கப்பட்டு, எம்எஸ்கே ரமேஷ்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | TN Budget 2025: பட்ஜெட்டில் ஸ்டாலின் போடும் பலே திட்டம்... 2026 தேர்தலே டார்கெட்!
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2025 : கலைஞர் உரிமைத் தொகை குறித்து வரப்போகும் முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ