CSK ரசிகர்களுக்கு ஷாக்: சேப்பாக்கில் தோனியை பார்க்க முடியாது!

ஐபிஎல்-க்கு முன்பாக சென்னை சேப்பாக்கத்தில் தோனியை பார்க்க முடியாது என கூறப்படுகிறது. 

Written by - R Balaji | Last Updated : Feb 11, 2025, 07:13 PM IST
  • ஐபிஎல் தொடர் மார்ச் கடைசி நடக்க வாய்ப்பு
  • தொடருக்கு முன்பாக சேப்பாக்கில் தோனியை பார்க்க முடியாது என தகவல்
  • சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
CSK ரசிகர்களுக்கு ஷாக்: சேப்பாக்கில் தோனியை பார்க்க முடியாது!  title=

Chennai Super Kings: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் மார்ச் மாதம் கடைசியில் தொடங்க உள்ளது. சாம்பியன் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 09ஆம் தேதி முடிவடைகிறது. இத்தொடரை தொடர்ந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்க இருக்கிறது. 

வழக்கமாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு அனைத்து அணிகளும் தனது சொந்த மைதானங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ளும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்வர். இதனை பார்பதற்காகவே ரசிகர்கள் மைத்தானத்தில் சொல்வார்கள். குறிப்பாக எம் எஸ் தோனியின் பயிற்சியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சொல்வர். இந்த நிலையில், சேப்பாக்கத்தில் தோனி பயிற்சி மேற்கொள்வதை பார்க்க முடியாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் படிங்க: கே.எல்.ராகுலுக்கு நடப்பது சரி இல்லை.. கம்பீரை எச்சரித்த இந்திய முன்னாள் வீரர்!

பிசிசிஐ அதிரடி கடிதம் 

இது தொடர்பாக பிசிசிஐ அனைத்து அணிகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. அதில், ஐபிஎல் சீசன் தொடர் தொடங்குவதற்கு முன்பு எந்த அணியும் அவர்களது சொந்த மைதானத்தை பயிற்சி மேற்கொள்வதற்காக பயம்படுத்தக் கூடாது என உத்திரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி மேற்கொள்ளும் பயிற்சியை பார்க்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. சென்னை அணியின் ரசிகர்களுக்கு அவர்களது ஹிரோவான தோனியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்திற்கு பயிற்சி மேற்கொள்ள வராத நிலையில், நாவலூர் அருகே அவர்களின் டிரெயினிங் செண்டரில் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பத்திரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். மெகா ஏலத்தில் அதிகபட்சமாக நூர் அகமது 10 கோடிக்கும், ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடிக்கும் டெவோன் கான்வே 6.25 கோடிக்கும் வாங்கப்பட்டனர். 

மேலும் படிங்க: 49 பந்தில், 160 ரன்கள்.. சம்பவம் செய்த மார்ட்டின் கப்தில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News