Kerala Summer Bumper Lottery Updates: கேரளா லாட்டரித்துறை சார்பில் விற்பனை செய்யப்படும் 'கோடைகால பம்பர் லாட்டரி டிக்கெட்' விற்பனைக்கு வந்துள்ளது. இதில் முதல் பரிசை வெல்லும் நபருக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் பரிசு ரூ.10 கோடிக்கு முகவர்களின் கமிஷன் ரூ.1 கோடி. இரண்டாவது பரிசு ரூ.50 லட்சமாகும்.
கோடைக்கால பம்பர் லாட்டரி 2025 (BR-102) மொத்த மதிப்பு எவ்வளவு?
கேரள அரசின் கோடைக்கால பம்பர் லாட்டரி 2025 (BR-102) மொத்தம் பரிசுத் தொகை ரூ.34 கோடி ஆகும். கோடைக்கால பம்பர் லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.250. மேலும் 54 லட்சம் கோடைக்கால பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. அச்சிடப்பட்ட டிக்கெட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.105.47 கோடி எனக் கூறப்பட்டு உள்ளது.
கேரளா கோடைக்கால பம்பர் லாட்டரி பரிசு பட்டியல்
கோடைக்கால பம்பர் லாட்டரி 2025 (BR-102) பரிசு விவரங்களை பார்த்தால், முதல் பரிசு 10 கோடி ரூபாய். இரண்டாவது பரிசு 50 லட்சம் ரூபாய் கிடைக்கும். மூன்றாவது பரிசாக 5 லட்சம் ரூபாயும், நான்காவது பரிசாக 1 லட்சம் ரூபாயும், ஐந்தாவது பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், ஆறாவது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், ஏழாவது பரிசாக ஆயிரம் ரூபாயும், எட்டாவது பரிசாக 500 ரூபாயும் மற்றும் ஆறுதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
கோடைக்கால பம்பர் 2025 விரிவான தகவல்கள்
இந்நிலையில் கேரள லாட்டரித் துறை சார்பில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட்டான கோடைகால பம்பர் லாட்டரி டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் முதல் பரிசை வெல்லும் நபருக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
கேரள நிதி அமைச்சர் கே.என். பாலகோபால்
கேரள மாநில லாட்டரித் துறையால் கேரள கோடைக்கால பம்பர் 2025 விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த கோடைக்கால பம்பர் BR-102 லாட்டரி டிக்கெட் கேரள நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
லாட்டரி லக்கி டிரா எண்: BR 102
லாட்டரி லக்கி டிரா தேதி: 02.04.2025
டிக்கெட் விலை: ரூ.250
கோடைக்கால பம்பர் லாட்டரி மூலம் வேலை வாய்ப்பு
கோடைக்கால பம்பர் லாட்டரியை ஏற்பாடு செய்வதன் நோக்கம், மாநிலத்தின் சமூக நலன் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு வருவாயைத் திரட்டுவதும், குறிப்பாக சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை வழங்குவதும் ஆகும்.
மாநில அரசால் ஒரு லாட்டரி விற்பனை ஏற்பாடு செய்வதன் நோக்கம் மற்றும் வரம்பு என்பது மாநிலத்தில் சில வகையான சூதாட்டம் மற்றும் சட்டவிரோத லாட்டரிகளை ஒழுங்குபடுத்துவதும், சமூகத்தின் தாக்கத்தைக் குறைப்பதும் ஆகும்.
மாநிலத்தின் வளர்ச்சியில் கோடைக்கால பம்பர் லாட்டரி
லாட்டரிகள் மூலம் திரட்டப்படும் நிதி மாநில கருவூலத்திற்குச் செல்லும், இதனால், மாநிலத்தின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கும், மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படலாம் என்று வரித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ