Benefits Of Using Ice Cubes On Your Face : முகத்தை பளபளப்பாக மாற்ற ஐஸ் கட்டிகள் உதவும். இவை சருமத்திற்கு நேச்சுரலான பொழுதை கொடுப்பதுடன், தளர்ந்திருக்கும் துறைகளை மூடி, சருமத்தை பிரஷ் ஆகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. சருமத்தில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இது ஒரு சிம்பிளான மற்றும் உதவக்கூடிய வழிமுறையாகும்.
ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்ப்பதால் சரும அழற்சி நிற்பதுடன், முகப்பரு மற்றும் பிற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். இவை முகத்திற்கு நீரேற்றத்தை அளித்து, கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் போகும் உதவும். இப்போதும் இளமையாக இருக்க விரும்புவர்கள் அடிக்கடி ஐஸ் க்யூபை முகத்தில் தடவலாம் என சிலர் குறிப்பிடுகின்றனர். இதை மனதில் தொடர்வது ஏற்படும் பிற நன்மைகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
பளபளக்கும் சருமம்:
முகத்தில் அடிக்கடி ஐஸ் க்யூப் தடவுவதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என கூறப்படுகிறது. இது உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதுடன், செல்கள் பாதிப்படையாமலும் இதனால் இயற்கையான பொலிவு ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. இதனால் சருமம் பளபளப்பாக மாறும்.
சரும ஓட்டைகளை மூடும்:
நம் முகத்தில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைக்கு காரணமாக இருப்பது சருமத்தில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத ஓட்டைகள் தான். இதன் மூலம் உள்ளே போகும் அழுக்குகள் கட்டிகளாக அல்லது முகப்பருக்களாக மாறிவிடுகின்றன. இந்த சரும ஓட்டைகளை மூட பல ட்ரீட்மன்ட்களை எடுப்பது வழக்கம். இதற்கு ஐஸ் க்யூப்ஸ் ஒரு தீர்வாக அமைந்திருக்கின்றன. இவை சரும முட்டைகளை மூடுவதுடன், உங்கள் சரவணன் ஸ்மூத்தாக இருப்பதற்கும் உதவுகிறது.
கருவளையங்கள் நீங்கும்:
உறங்காமல் இருப்பதால் அல்லது உடலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் இருப்பதால் கண்களுக்கு கருவளையங்கள் வரலாம். இதைக் குறைக்க ஐஸ்க்ரீம் செய் உபயோகிக்கலாம். கருவளையங்கள் கண்களுக்கு கீழ் இருக்கும் இடங்களில் ஐஸ் கியூபை வைத்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது கண்கள் வீங்கி இருப்பது போன்ற தோற்றத்தை குறைப்பதுடன் கருவளையத்தையும் நீக்கும். இதனால் உங்களுக்கு பிரஷ்ஷான மற்றும் இளமையான லுக் கிடைக்கும்.
ரேஷஸ் நீக்கும்:
ஐஸ் கியூப்ஸை வெயில் காலத்தில் சருமத்தில் தடவினால், அது ஹீட் ரேஷஸ் எனப்படும் சரும அறிப்பு அல்லது எரிச்சல் வராமல் தடுக்குமாம். இதனால் சருமம் சிவப்பாவது மற்றும் ஆங்காங்கே பொறிப்பொறியாக வருவது ஆகியவற்றை தடுக்கலாம். இதனால் சருமமும் பார்ப்பதற்கு ஹெல்தியாகவும் ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கும் எனக்கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஐஸ் கட்டிகள் போல் காட்சியளிக்கும் இந்த பழத்தை சாப்பிட்டால் வயிறு குளிரும்!
மேலும் படிக்க | ஐஸ் கட்டியிலிருந்து வெண்நிறப்புகை வருவதன் காரணம் என்ன!
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ