தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

Vijay Y category security | தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 14, 2025, 09:16 AM IST
  • நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
  • மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
  • ஆயுதம் ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு title=

TVK Vijay Y category security | தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய 8 முதல் 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் அதிகாரி அடங்கிய குழு அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும். தமிழ்நாட்டிற்குள் மட்டும் இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு இருக்கும் என தெரவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து களம் கண்ட நடிகர் விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர் என்ற வகையில் மத்திய அரசு இந்த பாதுகாப்பை வழங்கியுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகம்

திரைத்துறையில் உட்சபட்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவரின் கடைசி திரைப்படம் என்றும் அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு முழுமையாக அரசியல் களத்தில் பணியாற்ற இருப்பதாக தெரிவித்துள்ள அவர், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறி வைத்து கட்சி உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களை நியமித்திருக்கும் அவர், அடுத்ததாக கிளை செயலாளர்கள் நியமிக்கும் பணிகளை செய்து வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சி கட்டமைப்பை முழுமையாக அமைத்து, அரசியல் களத்தில் தீவிர பிரச்சாரத்தையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார். 

அரசியல் வியூகம்

அதற்காக பல்வேறு அரசியல் ஆலோசகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் நடிகர் விஜய். ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூன், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் ஆலோசனையின் அடிப்படையில் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் முன்னெடுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் மற்றும் அரசியல் நகர்வுகளை இனி கையில் எடுக்க உள்ளார். சாதி ஒழிப்பு, நிர்வாக சீர்கேடு இந்த இரண்டையும் முதன்மை பிரச்சார ஆயுதமாக அரசியல் களத்தில் எடுக்க இருக்கிறார் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 

விஜய் மீது விமர்சனம்

ஆனால், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர் பெரியார் மீது சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோது, அதனைப் பற்றி வாய் திறக்காதது அவரின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பெயரளவில் திராவிட அரசியல் நீட்சியாக தன்னை காட்டிக் கொண்டாலும் திரைமறைவில் வலதுசாரி அரசியலின் சூழ்ச்சியில் விஜய் இருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அம்பேத்கர் மற்றும் பெரியார் உள்ளிட்ட திராவிட அரசியல் கொள்கை தலைவர்களின் ஆதிக்கத்தை நீர்த்துப் போக செய்யும் வகையிலேயே விஜய்யின் அரசியல் பயணம் இருக்கும் என்றும் விமர்சிக்கப்படுகிறார். இருப்பினும் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம்  விஜய்யின் செயல்பாடுகளே பதில் அளிக்கும் என விஜய் கட்சியினர் கூறுகின்றனர். இப்படியான சூழலில் விஜய்க்கு மத்திய அரசு அளித்திருக்கும் பாதுகாப்பும் அரசியல் உள்நோக்கத்துடன் பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | TN Cabinet: அமைச்சரவையில் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு - ராஜகண்ணப்பனுக்கு மீண்டும் செக்!

மேலும் படிக்க | தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! சூப்பரான வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News