Farmers Unique IDs Latest News: விவசாயிகள் குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக தகவல் வெளியாகி இருக்கிறது. இனி அனைத்து அரசு திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் வழங்குவற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதுக்குறித்து முழு விவரத்தையும் பார்ப்போம்.
விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்குமே ஆதார் எண் போன்று புதிய அடையாள அட்டை எண் உருவாக்க வேண்டும் என மாநில அரசிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை எண் வழங்க உள்ளனர். அதுக்காக ஒவ்வொரு கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடந்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை
விவசாயிகளுக்கு விரைவில் தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகன் தெரிவித்துள்ளாா். வேளாண்மை அடுக்ககம் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் தரவுகள் சேகரிக்க ஒருங்கிணைத்து முகாம்கள்
இத்திட்டத்தில் முதல் கட்டமாக விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ள உழவா் நலத்துறையில் உள்ள அனைத்து அலுவலா்கள் மற்றும் மகளிா் திட்டத்தில் கிராம அளவில் பணியாற்றக்கூடிய சமுதாய வள பயிற்றுநா்களை ஒருங்கிணைத்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.
விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள அட்டை
வேளாண்மை அடுக்ககம் திட்டம் மத்திய அரசு வேளாண் அமைச்சகம் மூலமாக மாநிலம் முழுவதும் செயல்படவுள்ளது. மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்று தனித்துவமான அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும்.
விவசாயி அடையாள அட்டை எண் ஏன் அவசியமானது?
உங்களுக்கு நிலம் இருக்கு இருக்கிறது. நீங்கள் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்றால், கண்டிப்பா உங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். உங்க நிலத்துக்கான ஒரு புதிய அடையாள எண்ணை பெற்றுக்கொள்ளுங்கள். இந்த தனித்துவமான அடையாள அட்டை எண் இருந்தால் மட்டும் தான் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற முடியும் எனக் கூறப்படுகிறது.
விவசாயி அடையாள அட்டை எத்தன அடிப்படையில் கிடைக்கும்?
விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, அவா்களது தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் இந்த தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு அடையாள அட்டை பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்?
தமிழகத்தில் விவசாயம் சாா்ந்த திட்ட பலன்களை வழங்கும் சுமாா் 24 துறைகளை ஒன்றிணைத்து இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளும் வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் மகளிா் திட்ட பணியாளா்களிடம் பதிவு செய்து பயன்பெறலாம்.
விவசாயி அடையாள அட்டை பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?
ஆதாா் எண், சிட்டா/பட்டா, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி மொபைல் நம்பர் ஆகியவற்றுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இத்திட்ட முகாம் நடைபெறுகிறது எனவும் இணை இயக்குநா் கா.முருகன் தெரிவித்துள்ளாா்.
மேலும் படிக்க - தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! சூப்பரான வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம்
மேலும் படிக்க - PM Kisan: 19வது தவணை யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? செக் செய்வது எப்படி?
மேலும் படிக்க - தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ் -பயிர் காப்பீடு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ