'சசிகலா, டிடிவி, நான்... அதிமுகவில் இணைய எந்த நிபந்தனையும் இல்லை' - ஓபிஎஸ் அதிரடி

Tamilnadu Today News: "நான், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம்" என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 13, 2025, 03:37 PM IST
  • எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் செங்கோட்டையன்தான் - ஓபிஎஸ்
  • பாஜக கூட்டணியில் அதிமுக இணைவதுதான் அனைவருக்கும் நல்லது - ஓபிஎஸ்
  • அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியவர் ஜெயலலிதா - ஓபிஎஸ்
'சசிகலா, டிடிவி, நான்... அதிமுகவில் இணைய எந்த நிபந்தனையும் இல்லை' - ஓபிஎஸ் அதிரடி title=

Tamilnadu Today News, O Panneerselvam Pressmeet: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பஞ்சமி நிலம் வாங்கியதாக வந்த குற்றச்சாட்டிற்கு ஓபிஎஸ் பதிலளித்தார்.

அதில்,"தேனி அல்லிநகரத்தில் கடந்த 1937ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவரின் பூர்விக நிலம் எந்தவித வகைப்படுத்தாமல் இருந்தது. அதன்பின் 1984ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தினை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு சுப்புராஜ் என்பவரிடம் இருந்து நான் நிலத்தை வாங்கினேன். பின்னர் அது பஞ்சமி நிலம் என்று தெரிய வந்ததால் 2024ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு அந்த நிலத்தை எழுதிக் கொடுத்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.

Tamilnadu Today News: 'தேர்தல் ஆணையத்திற்கே அதிகாராம் இருக்கிறது'

தொடர்ந்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், "அதிமுக இயக்கத்தை உருவாக்க எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா 50 ஆண்டு காலமாக பாடுபட்டனர். கட்சியின் விதிமுறைகளின்படி தேர்தல் மூலமாக தான் பொதுசெயலாளர் தேர்வு செய்ய முடியும். இந்த விதி யாராலும் திருத்தவோ, ரத்து செய்யவோ முடியாது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இந்த விதியை திருத்தம் செய்தார். அதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ, அதே அதிகாரம்தான் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது.

மேலும் படிக்க | 'என்னை சோதிக்காதீர்கள்' இபிஎஸ் உடன் பிரச்னையா...? செங்கோட்டையன் சொன்னது என்ன?

Tamilnadu Today News: 'பதில் சொல்ல வேண்டியவர் செங்கோட்டையனே'

அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் தாமதப்படுத்தியதால் மாநில அரசின் நிலையில் மூலம் அத்திட்டத்தினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். நானும் செங்கோட்டையனும் இணைந்து பல மாநாடுகளை முன்னிலையில் நின்று நடத்தியுள்ளோம். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் செங்கோட்டையன்தான்" என தெரிவித்தார்.

Tamilnadu Today News: 'இதுதான் அனைவருக்கும் நல்லது...'

நான், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்தால் தான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாழ்வு. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தால் தான் அனைவருக்கும் நல்லது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியலில் எந்த இலக்கை நோக்கி செல்கிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.

Tamilnadu Today News: நெருக்கடியில் அதிமுக

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (பிப். 12) உத்தரவிட்டது. தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் வரும் பிப். 17ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட்2025 : கலைஞர் உரிமைத் தொகை குறித்து வரப்போகும் முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News