கவின் படத்திற்காக தனது டைட்டிலை கொடுத்த மிஷ்கின்! சதீஷ் நெகிழ்ச்சி..

Kavin Starrer Kiss Movie : ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில்,  நடன இயக்குநர் சதீஷ்  இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானத. இதில் மிஷ்கின் தனக்கு அவரிடமிருந்த டைட்டிலை கொடுத்தது குறித்து இயக்குநர் சதீஷ் பெருமிதத்துடன் பேசியிருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Feb 12, 2025, 06:25 PM IST
  • கவின் நடிக்கும் கிஸ் படம்
  • ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
  • பட டைட்டில் குறித்து பேசிய சதீஷ்!!
கவின் படத்திற்காக தனது டைட்டிலை கொடுத்த மிஷ்கின்! சதீஷ் நெகிழ்ச்சி.. title=

Kavin Starrer Kiss Movie : ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக,  இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில்,  உருவாகியுள்ள “கிஸ்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக்  இன்று வெளியாகியுள்ளது. 

காதலர் தினம் நெருங்கும் நிலையில், காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலீஷாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும், புதுமையான, மிகவும் வித்தியாசாமான ஃபர்ஸ்ட்லுக், பார்ப்பவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகுமென படக்குழு அறிவித்திருப்பது, மேலும் படத்தின் ஆவலைத் தூண்டுகிறது. 

தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  தயாரிப்பாளர் ராகுல், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தை  தயாரித்துள்ளார். 

டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து, நடிகராகவும் வலம் வரும் சதீஷ், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.  இன்றைய இளைய தலைமுறை காதலைக் கொண்டாடும் விதத்தில் வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். 

டைட்டிலை கொடுத்த மிஷ்கின்!

இந்த படம் குறித்து பேசிய நடன இயக்குநர் சதீஷ், மிஷ்கின் தனக்கு இந்த டைட்டிலின் உரிமத்தை கொடுத்தது குறித்து பேசியிருக்கிறார். “மிஷ்கின் சாரிடம் இத்தனை நாட்கள் இந்த டைட்டில் இருந்திருந்தாலும் நான் கேட்டவுடன் அந்த டைட்டிலை அவர் யோசிக்காமல் கொடுத்து விட்டார். இதனால், பூஜையின் போது அவரைத்தான் கேமரா ரோல் செய்ய செய்தோம்” என்று தெரிவித்தார்.

தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமான கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, “அயோத்தி” படப்புகழ் ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தேவயானி, கவுசல்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர்  ஜென் மார்டின்  இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார், எடிட்டராக RC பிரனவ் பணியாற்ற, மோகன் மகேந்திரன் கலை இயக்கம் செய்துள்ளார். சண்டைப்பயிற்சி - பீட்டர் ஹெயின். 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | நயன்தாரா கவின் இருவரும் ஜோடியாக நடிக்கும் படத்திற்கு நச்சுன்னு ஒருப் பெயர் !

மேலும் படிக்க | Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News